உதட்டு வெடிப்பு போக :
கரும்பு சக்கையை எடுத்து காய வைத்து பின் எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்
தொடர் விக்கல் நிற்க:
நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து,அதை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் உடனே நிற்கும்.
தலைவலி போக :
நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு எடுத்து, அதனுடன் 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
வாய் நாற்றம் போக :
சட்டியில் படிகாரம் போட்டு நன்கு காய்ச்சி ஆறவைத்து பின் அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் படி படியாக போகும்.
தொண்டை கரகரப்பு :
சுக்கு, பால்,மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து நன்கு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக