வெடிப்பு, விரிசல், மலம் கழிக்கும்போதும், கழித்த பின்னரும் தாங்க முடியாத வலி, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, சீழ்க் கட்டி, பிளவை, மூலம், ரத்தக் கட்டி போன்றவற்றைக் கூறலாம்.
நிறைய தண்ணீர் குடியுங்கள்:
பெரும்பாலான பிரச்னைகளுக்கு உணவு முறையும், மலச்சிக்கலுமே காரணமாக உள்ளது. நீர் குறைந்த, காய்ந்துபோன மலத்தை முக்கி வெளியேற்றும் போது மென்மையான தசைகள் பாதிப்புக்குள்ளாகி லேசாகக் கிழிந்து விடுகிறது அல்லது விரிசலடைந்து விடுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். சிலருக்கு கீழ்க்கட்டிகள் ஏற்படக்கூடும். இதற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம். மூலம், ஆசனவாய் இறக்கம், புற்று நோய்க்கட்டிகள் ஏற்படக்கூடும்.
மூல நோய் காரணமாக மலம் கழிக்கும் போதும், கழித்த பின்னரும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கட்டிகளிலிருந்தும் ரத்தக் கசிவு உண்டாகலாம். இதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். வயிற்றில் பூச்சிகள் இருப்பதால், மலவாய்ப் பகுதியில் அரிப்பும், நமைச்சலும் இருக்கும்.
பெரும்பாலும் குழந்தைகள்தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவார்கள். குதம், மலக்குடல் போன்றப் பகுதி முக்கியமானதும் சிக்கலானதுமாக இருப்பதால் இது தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. இத்தகைய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க மலக்குடல் நோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக