என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
அழகு குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகு குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்!

சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதைப் பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். கைகளையும், கால்களையும் மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கமாக இருக்கும். இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கோல்டு க்ரீம்களைப் பூசிக்கொள்வோம்.

ஆயினும், சருமம் வறட்சியடைந்து காணப்படுதல் என்பது ஒரு நோயல்ல. இது ஒருசில புறக் காரணிகளால் ஏற்படுவதாகும். இருப்பினும் சிலருக்கு சில நோயின் காரணங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை (dermatitis) ஏற்படுத்திவிடும்.
இத்தகைய வறண்ட சருமத்திட்டுக்கள், உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக இந்த வறட்சிகளானது கைகள் மற்றும் கால்களில் அதிகம் காணப்படும். சிலருக்கு முகத்தில் வாய், கன்னம் மற்றும் கண்களுக்கு அடியில் இந்தத் திட்டுக்கள் காணப்படும். ஆனால் பலருக்கு இந்த வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாது. ஆகவே அத்தகையவர்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை, அந்த காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காற்று
உலர்ந்த காற்றினால், முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். ஏனெனில் உலர்ந்த காற்றானது சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமம் களையிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.
வெந்நீர்
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையானது, சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவும். ஆனால் வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணமாகும். இது சருமத்தில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடுகிறது.
சோப்புக்கள்
பலவகையான சோப்புக்களைப் பயன்படுத்துதலும், சரும வறட்சிக்குக் காரணமாகும். வெந்நீரைப் போலவே, இதுவும் சருமத்தைப் பாதுகாக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கிவிடுகிறது. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவதாலும், சருமம் மிகவும் வறண்டு போகும். சில நேரங்களில் சோப்புக்கள் சரும வெடிப்புகளையும், இரத்தக்கசிவுகளையும் ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தொற்றும் ஏற்படலாம். ஆகவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் கலந்த சோப்புகள்/ஹேண்ட் வாஷ் மற்றும் கிளீன்ஸர்களையும் பயன்படுத்துவது நல்லது. மிக அதிகமாக சருமத்தை ஸ்க்ரப் செய்வதாலும், சருமம் வறண்டுவிடும். சருமத்தை இவை அதிகம் உராய்வதால், எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறண்டு விடுகிறது. எனவே ஸ்கரப் செய்யும் போது கைகளையோ அல்லது மெல்லிய ஸ்கரப்பர்களையோ பயன்படுத்த வேண்டும்.
மருந்துகள்
சில மருந்துகளின் பக்க விளைவாகவும், வறண்ட சருமம் ஏற்படுகிறது. அதிக இரத்த அழுத்த நோய்க்கு பயன்படும் டையூரடிக்ஸ் (diuretics) மருந்துகளாலும், பரு மற்றும் ரெட்டினாய்டு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்துகளினாலும் வறண்ட சருமம் ஏற்படும்.
நோய்கள்
எக்ஸிமா, சொரியாஸிஸ், நீரிழிவு போன்ற நோய்களும், வறண்ட சருமத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இவைகளால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு அடிக்கடி மாறுபடுவதினால், சருமம் வறட்சி அடைகிறது. மேலும் தைராய்டு சார்ந்த மருந்துகளாலும், சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசை நீங்கி வறண்ட சருமம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சத்தான மற்றும் சரிவிகித உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பதும், சரும வறட்சிக்குக் காரணமாகும். அதுவும் வயதான பெண்களுக்கு, ஹார்மோன்களின் மாறுபாடுகளால் வறண்ட சருமம் ஏற்படுகிறது.

தூக்கம் ஒரு மாமருந்து

நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி நேரமும் பெரியவர்கள் 8 மணி நேரமும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 மணி நேரமும் உறங்கினால் நமது உயிர் பேட்டரி சார்ஜ் ஆகி ஆரோக்கியம் அழிவு படாமல் உயர்த்திடப்படும்.

மன சஞ்சலம் தீர்க்கும் மருந்து உறக்கம்,கவலைகளைக் கரைக்கும் மருந்து உறக்கம்,உடல் பிணிகளைப் போக்கும் மருந்து உறக்கம்,தினம் புத்துணர்ச்சியைத் தரும் மருந்து உறக்கம்,ஆழ்மனதை சுத்தரிக்கும் மருந்து உறக்கம்,உறக்கம் இல்லையேல் நரம்பு தளர்வு ஏற்படும்
இன் சோம்னியா நோய் ஏற்படும்.அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படாது.கழிவு மண்டல நச்சுக்கள் உடலில் தேங்கும்.மனம் தறி கெட்டு பாயும்.
சுவாசக் காற்று, நீர், வெப்பத் தேவை போல் உறக்கம் அத்தியாவசியக் கலை. அதை அருமையாக அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு.பகலில் தூங்கியே இரவுத் தூக்கத்தைத் தொலைத்து தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். தூக்க மாத்திரையின் துணையுடன் ஒப்புக்குத் தூங்குபவர் நம்மில் பலர் உள்ளனர்.பகல் தூக்கம் பட்டுத் தூக்கம்
இரவு தூக்கம் இன்பத் தூக்கம்.நாம் படுக்கைக்கு சென்றவுடன் தூங்கும் தன்மையைப் பெற்றால் அதுவே வாழ்வின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமாகும். அதுவே மன நிம்மதிக்கு அத்தாட்சி, சான்றாகும்.
இரவுத் தூக்கத்தில் ஜீரண மண்டலம் தவிர மற்ற தசைநார்கள் இயக்கங்கள் முழு ஓய்வு எடுத்து அழிந்த திசுக்கள் புத்துப்பித்தல் பராமரித்தல் நடைபெறுகிறது. உடலில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக நரம்பு சோர்வு நரம்பு தளர்ச்சி சரி செய்யப்படுகிறது.
'நினைந்து நினைந்து உணர்ந்த உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்த அன்பே&
தவம் புரியேன் தவம் புரிந்தார் தமைப் போல நடித்தேன்
தருக்குகின்றே னுணர்ச்சியிலாச் சடம் போல விருந்தேன்.
சுகமன நித்திரை கிடைக்க சில,
1. இரவல் தூக்கமாத்திரை, போதை வஸ்துகள் சாப்பிடக்கூடாது
2. இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்கு முடித்தல்.
3. கனி உணவாக சாப்பிடுதல் நல்லது.
4. உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுதல். (அரை மணி நேரம் குறுநடை செல்லலாம்.)
5. சளி, இருமல், சுவாசப்பிணிகள் இருப்பவர்கள் பால், தயிர் முட்டை உணவை இரவில் நிறுத்த வேண்டும். தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
6. இரவில் படுக்கும் முன் சூடான காபி, டீ, பிற இதர குளிர்பானங்கள் தவிர்க்கப்படவேண்டும்-.
7. படுக்கும் முன் தியானம் செய்யலாம்.
8. அலுவலக வேலை, தீர்வு கிட்டாத வேலைகளை இரவில் செய்யக்கூடாது.
9. படுக்கும் முன் அரை டம்ளர் அளவு நீர் பருகலாம்.
10. கடவுள் சிந்தனை, மந்திரம் உச்சரிக்கலாம்.
11. மனதுக்கு பிடித்த இசை நல்லது.
12. பல நேரம் தேவையற்ற இரைச்சல், ஓசை, எரிச்சல் தரும் சினிமாப் பாடல்கள் நல்ல தூக்கத்தில் முதல் தர எரிரியாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13. தினசரிக் கவலைகளை இரவு 8 மணிக்குள் வெளியேற்றிவிட வேண்டும். கரைத்து விட வேண்டும். தொலைத்து விட வேண்டும். வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை படுக்கைக்கு அழைத்துச் செல்லக்கூடாது.

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே!!

விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும். மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணெயும் சரியான ஒன்றாக இருக்கும். சரி, விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!

ஹேர் கண்டிஷனர்

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

கை மற்றும் நகப் பராமரிப்பு

தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

கிளின்சிங்

விளக்கெண்ணெய் கொண்டும் சருமத்திற்கு கிளின்சிங் செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.

குதிகால் வெடிப்புக்கள்

குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.

சுருக்கங்கள்

சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி

பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.

மச்சம்

விளக்கெண்ணெயில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.

மாய்ச்சுரைசர்

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ரெட்ச்

மார்க் இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

முதுமைத் தோற்றம்

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அத்தகையவர்கள், விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

மரு பிரச்னைக்கு ஒரு தீர்வு

"மரு" (Skin Tag) உதிர... 
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது 
"மரு" [Skin Tag] ஆகும். 
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். 
அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... 

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், 

பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். 
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். 
இது போல் தினமும் பூசி வர, 
நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


45 வயதைக் தொடும் பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்!

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது,ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைட்டமின்களை 45 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• 45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின்களாகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.

• தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும்.

• வைட்டமின் Q10 45 வயதான பெண்கள் அவசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமினானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

• இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• 45 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

• அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை 
பல் 
தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக 

படிந்து விடுகிறது.


 பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் 
சொல்லித் தருவதே, 

அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..


 நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற 


வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான 


மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி



வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு 


(தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை 


வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. 

கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. 


கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் 


போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். 


வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது 


நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே 


இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.




சில நிமிடங்களில் முகம் பளபளக்க

உங்கள் முகம் பளபளப்பு பெற சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காரட்டே போதும்.
ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு,  அதை நன்றாக கூழ்போல் அரைத்து, உங்கள் முகத்தில்,  அந்த கூழை Facial Cream போல் நன்றாக தடவிக்கொள்ளுங்கள்.

அந்த பசையானது தோலில் நன்கு ஊறிய பிறகு சிறிது நேரம் நன்றாக ஊறவிட்டு முகத்தை கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது புதுப்பொலிவுடன், வழவழப்புத் தன்மையைப் பெற்றிருக்கும்.





பற்களுக்கு டிப்ஸ்



*இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
*சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
*பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
*ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.










எந்த வயதிலும் அழகாய் தெரிய சில டிப்ஸ்


தினம் தினம் நமக்கு வயதாகிறது. ஒருநாள் உறங்கி எழுந்தாலே போதும் நம்முடைய வாழ்நாளில் ஒருநாள் முடிந்து விடுகிறது. நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.
டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.
கண் சுருக்கம் போக்கவும்
வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.
கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.
நீர்ச் சத்து குறைபாடு
முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.
கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.
கண்ணக் குழி தவிர்க்க
இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.
இயற்கையை ரசியுங்கள்
உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்… கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.

 

சிரிக்கும் போது முகத்தில் கோடு விழுகிறதா

வாய்விட்டு மகிழ்ச்சியாக சிரிக்கும் போது உதடுகளோடு கண்களும் சிரிக்கும் அப்போது கண்களின் ஓரத்திலும் உதடுகளின் ஓரத்திலும் அனைவருக்கும் ஒரு கோடு ஏற்படும். இக்கோடுகள் உள்ளவர்கள் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவை வெறும் சிரிப்புக் கோடுகள் அல்ல இவை collagen என்ற புரதமும் hyaluronic என்ற அமிலமும் இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இந்த கோடுகள் ஏற்படுவதால் முகத்தில் முதுமை கூடி வயதினை அதிகரித்துக் காட்டும்.
பெரும்பாலும் 40-80 வயதிற்கிடையில் மனிதர்கள் இயற்கையான hyaluronic அமிலத்தினை இழக்கின்றனராம். முதலில் கொழுப்பை இழக்கும் இடமாகக் கண்கள்தான் உள்ளன. இதனுடன், சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளும் தொடர்புபட்டுள்ளன. இதனாலும் இச்சுருக்கங்கள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

 
சிரிப்புகளின் மூலம் ஏற்படும் சுருக்கத்தினை போக்க Botox என்ற மருந்து தசைநார்களை மரத்துப்போகச் செய்துவிடும். ஊசிகள் முகத்தினை ஓர் உறைந்த நிலைக்கு மாற்றிவிடும். இதற்கு மாறாக hyaluronic அமிலத்தினால் உருவாக்கப்பட்ட நிரப்பிகளை உட்செலுத்தினால் அது தோலை உப்ப வைத்துக்கொண்டிருக்கும். இதன் விலையும் Botox மருந்தின் விலையும் ஒன்றுதானாம். 300 பவுன்ட்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிகிச்சை முறை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் ஹரோட்ஸ்சில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த WrinkleMD என்ற வலியற்ற ஊசியற்ற கருவியானது 130 பவுண்ட்களே பெறுமதியானதாகும். இது hyaluronic அமிலங்கொண்ட மூலக்கூறுகளைப் புதிய தொழிநுட்ப முறையினால் தோலுக்குள் ஆழமாகச் செலுத்துகின்றது.
இதனை 35-65 இற்குமிடைப்பட்ட பெண்கள் ஒரு மாதமாகப் பயன்படுத்தினார் என்றும் வலியற்றதாக இருந்ததாகவும் தோலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். வாரந்தோறும் இந்த சிலிக்கன் அமைப்புச் சரிபார்க்கப்பட்டதாகவும் இவ்வாறு 4 வாரங்கள் முடிந்தபின்னர் அதை எடுத்தபோது அவர்களது 41.7வீதச் சுருக்கம் குறைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஊசியின் வலிகளின்றி அமிலத்தினைத் தோலிற்குள் செலுத்துவதானது தோலிற்கும் நல்லதாகும். கிருமித்தொற்றினையும் இது இல்லாமற்செய்கின்றது என்கின்றனர் நிபுணர்கள்.
இதனைப் பலதரப்பட்ட பெண்களில் செய்தபோதும் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள் கிடைத்திருந்தன. எனினும் இவை எவ்வளவு காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்குமென்பதும் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முகத்தின் இளமையை தக்கவைக்க இந்த சிகிச்சை முறையினை 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.






Lipstick(லிப்ஸ்டிக்) எப்படி போடணும்னு உங்களுக்கு தெரியுமா



Beauty tips in tamil
முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டும் பகுதிகள் கண்களும் உதடுகளும்தான். அந்தப் பகுதிகளில் சரியாக மேக்அப் போடாவிட்டால் முகத்தின் ஒட்டு மொத்த அழகும் காணாமல் போய்விடும். எனவே லிப்ஸ்டிக் புதிதாக போடுபவர்களுக்காக அவர்களின் நிறத்திற்கேற்ற சில டிப்ஸ்களை கொடுத்துள்ளனர் அழகியல் நிபுணர்கள் படியுங்களேன்.
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் நம் நிறத்திற்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுக்கவேண்டும். நிறம் குறைவாகவோ, மாநிறமாகவோ உள்ள பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும். சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.
லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது. அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள். ஈரமான உதடுகளில் லிப்ஸ்டிக் போடக்கூடாது. இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி காய்ந்த பின்னர் அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.
முதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும்.
உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும். மெலிதான உதடுகளைக் கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியில் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின் உள் பகுதியிலேயே அவுட் லைனை போட வேண்டும். மேல் உதடு தடிமனாக இருப்பவர்கள், மேல் உதட்டின் உள் பகுதியிலுமாக அவுட் லைன் போட வேண்டும். அவுட் லைன் போட்ட பகுதிகளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.
லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது. அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி, இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; காரணம், உதடுகள் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்கவும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.
லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தாலும், உதடுகள் பளபளக்கும். பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம்.

 











இளமையாக தோற்றமளிக்க சில வழிகள்

இளமைக்கு சில TIPS
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணமே பலருக்கும் மன தைரியத்தை இழக்கச் செய்துவிடும்
ஆனால் வயதாகாமல் இருக்கச் செய்ய எந்த வழியும் இல்லை.
ஆனால் நாம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. என்ன எளிய வழியா? இளமையாக இருக்க எளிய வழியா என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்க வேண்டாம்?
நிச்சயமாக எளிய வழிதான். அதாவது எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதும், புன்னகையுடனான உங்கள் முகமும் உங்களை பார்ப்பவர்களுக்கு நீங்கள் இளமையாகக் காட்சியளிப்பீர்கள்
ஒருவரை பார்த்ததும் அவரது முகம்தான் அவரது வயதைக் காட்டுகிறது. எனவே, ஒருவரைப் பார்த்ததும் சோம்பித் தனமாக காட்சியளித்தால் அவரது இளமை நம் கண் முன் தெரிவதில்லை. அதே சமயம், ஒரு வயதான முதியவர் நம்மைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சியாக ஒரு ஹாய் சொன்னால் கூட அந்த இடத்தில் இருவரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அங்கு வயது மறைந்து விடுகிறது.
இதெல்லாம் வெறும் நடைமுறை என்றாலும், அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டும் என்றால், அதிகமாக சிரிப்பதனால் முகத்திற்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. எனவே, முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் தள்ளிப்போடப்படுகின்றன. பார்ப்பதற்கு இளமையாக தோற்றமளிக்கின்றீர்கள் என்கிறது பல ஆய்வுகள்.
மேலும், புன்னகையுடன் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து இவருக்கு என்ன வயதாக இருக்கும் என்று கேட்டால் நிச்சயமாக 5 வயதாவது குறைவாகத்தான் கணிக்க முடியும் என்பது நமக்கும் தெரிந்த விஷயம்தானே.
சந்தோஷமா இருங்க வாய் விட்டு சிரிங்க 




பற்களையும் கவனிக்கலாமே!


 முக அழகை பேணிக்காப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

மேலும், சுத்தமான பேச்சும் வராது. அதனால்தான் `பல் போனால் சொல் போச்சு’ என்று சொல்வார்கள்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும்.

அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். ஒரு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த தற்காலிக பற்களை `பால் பற்கள்’ என்பார்கள். 21/2 முதல் 3 வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும்.

இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் சில தாய்மார்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் எனப்படும் பல்சொத்தையை ஏற்படுத்தி விடுகின்றன.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து விடுவது நல்லது.

பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே, அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இடைறாக இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விடுவது நல்லது. அப்படி நீக்காவிட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடைறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடைறு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம்.

ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.

வைட்டமின்களின் அவசியம் பயன்

நாம் உயிர் வாழ உடலுக்கு முக்கியமான உயிர் சத்துக்கள்(வைட்டமின்கள்) தேவைப்படுகின்றன. நாம் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களை தெரிந்து கொண்டு அதை உட்கொள்வது மிகவும் அவசியம்.
உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள்:




வைட்டமின் ஏ: மாலை கண், கண் பார்வை, தோல் பொலிவு போன்றவற்றிற்கு இந்த வைட்டமினை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்: அன்னாசி, பப்பாளி, மா, பலா, கொய்யா, கேரட்.
வைட்டமின் பி: உடல் வலி, நரம்பு ஊட்டத்துக்கும், உடல் வனப்பு, வயிற்றுப்புண், வாய்ப்புண் இவை அனைத்தும் குணமாவதற்கு இச்சத்து அவசியம்.
காய்கள் மற்றும் பழங்கள்: வாழைப் பூ, சாம்பல் பூசணி, முருங்கைக்காய், கீரை.
வைட்டமின் சி: ரத்த ஓட்டத்திற்கும், தூய்மைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.
காய்கள் மற்றும் பழங்கள்: எலும்பிச்சை, அன்னாசி, பப்பாளி, தக்காளி, நெல்லிக்காய், ஆரஞ்சு.
வைட்டமின் டி: உடலுக்கு ஊட்டச்சத்து, வலிமையையும் கொடுக்கும். இச்சத்து குறையும் போது தோல் நோய்கள் உண்டாகும்.
காய்கள் மற்றும் பழங்கள்: சூரிய ஒளி, முட்டை, மீன், தேங்காய், கடலை.
வைட்டமின் ஈ: ஊக்கத்தையும், உயிரணுக்களையும், கருத்தரித்தலுக்கான முட்டைகளையும் தோற்றுவிப்பது, வளர்ப்பது, ஆண்மை மற்றும் பெண்மையை வளர்ப்பதும் இந்த வைட்டமின் ஆகும்.
காய்கள் மற்றும் பழங்கள்: முருங்கைக்காய், விதை, முந்திரிப்பருப்பு, பேரிச்சம்பழம்.
வைட்டமின் கே: ரத்த உறைதலுக்கு உறுதுணையாக இருக்கிறது. ரத்தத்தின் தூய்மையை காக்கிறது. நாம் உட்கொள்ளும் துவர்ப்பு சுவையில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
காய்கள் மற்றும் பழங்கள்: வாழைப் பூ, அத்திக்காய், மாதுளை, நெல்லி,

அழகு குறிப்புகள் சில




அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு.... இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?
ஆரோக்கியம்
* உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.
இயற்கை தரும் க்ளென்சர்ஸ்
* பால் நல்ல க்ளென்சர் (cleanser) என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.
* தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்தடவிக் கொள்ளலாம்.
* வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.
பளிச் முகத்துக்கு
* பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!
முகப் பொலிவுக்கு
* வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கருப்பு திட்டுகள் மறைய
* மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்... மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!
கருவளையம் மறைய
* கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
சருமம் கருமை மாற
* முட்டைகோ ஸின் வெளிப்புற இலைகளை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
கழுத்தைப் பராமரிக்க
* நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் ( Olive oil) சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய "டபுள் சின்" நாளடைவில் "சூப்பர் சின்" ஆகிவிடும்!
முகத்தில் புதுப்பொலிவுக்கு
* தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.
* பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!
சிவந்த இதழ்களுக்கு
* சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!
நகங்கள் பொலிவு பெற
* பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.