உடலின் தொப்புளுக்கு மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும். அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று தோற்றமளிக்கும். முதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக அமையும்.
செய்முறை
1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.
2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.
3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.
4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.
5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.
6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக் கொள்ளவும்.
7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.
பயன்கள்
1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.
2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.
4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.
5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.
6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.
7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக