என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
காய்கறி-பழங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காய்கறி-பழங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உருளைக்கிழங்கு - மருத்துவப் பயன்கள்

ல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.


யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
குண்டான மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்.

வாழவைக்கும் வைட்டமின்கள்

* முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம் :

* வைட்டமின் `ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
* முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.
* வைட்டமின் `பி’ : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
* கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
* வைட்டமின் `சி’ : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
* ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
* வைட்டமின் `டி’ : வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலு
விழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
* போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது. வைட்டமின் `ஈ’ : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும்.
* கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
அனைத்து வைட்டமின்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவை எனவே, ஆரோக்கியமான உணவை உண்டு பழகுங்கள்.

பப்பாளியின் பயன்கள்


இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.

பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது.

இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு.

எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.

உணவே மருந்து!


*நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் 

அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

*தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக

இருக்கும்.

*மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம்,

பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

*ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை

நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

*பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம்

உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

*சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம்,

கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

*சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

*வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை,

எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

*பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத்

தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

*சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

*சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய

பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

*பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

*அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து

விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

*தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

*பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால்

போதும். கல்லும் கரைந்துவிடும்.

*கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள்,

வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

இளமைக்கு-திராட்சை

திராட்சை பற்றி கொஞ்சம் விரிவு ..
 
திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
பளிச் முகத்திற்கு
தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
வெண்மையான பற்கள்
திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.
முகச்சுருக்கம் போக்கும்
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.
 

வைட்டமின் D



உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது. உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது.
எனவே தினமும் உயிர்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அசைவ உணவுகளை சாப்பிடுவதாலும் மட்டுமே கிடைக்கின்றன.
இந்த உயிர்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலுக்கு மிகவும் முக்கியமான உயிர்சத்தான வைட்டமின் ‘ஈ’ பற்றி அறிந்து கொள்வோம்.
வைட்டமின் ‘D’
மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு.
வைட்டமின் ‘D’- யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது. அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.
வைட்டமின் ‘D’ பொதுவாக இருவகைப்படும்.
வைட்டமின் ‘D2’, வைட்டமின் ‘ஈ3’
வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.
வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.
வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.
வைட்டமின் ‘D’-ன் பயன்கள்
· எலும்புகளை பலப்படுத்தும்
· உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
· எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
· குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
· வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.
· தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.
· மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.
· நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப் படுத்துகிறது.
· சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
· ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் டி மிகவும் பயன்படுகிறது.
· சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்
பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.
ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘ஈ’ உடலுக்கு கிடைக்கிறது.
வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்
வைட்டமின் ‘D’ குறைந்துவிட்டால், நரம்புகளில் பாதிப்புகள், முதுகெலும்பு கோளாறு, பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும். இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.
பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.
இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
பொதுவாக வைட்டமின் ‘D3’ தான் குடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இதனால் பாராதைராய்டு சுரப்பிகள், பாராத்தார்மோன் அதிகமாக சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவை குறைக்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி வலுவிழந்த விடுகின்றன. இதற்கு ரிக்கட்ஸ் என்று பெயர்.
ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்
ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.
தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.
கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல். கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.
நீரிழிவு உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘D3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

 

 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.

இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

பப்பாளியில் `பப்பைன்’ என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்

அழகிற நிறம் மற்றும் நிறைய சத்துகளை கொண்ட காய் பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.


1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

Tag: பீட்ரூட்,பீட்ரூட்,பீட்ரூட்,பீட்ரூட்,பீட்ரூட்,பீட்ரூட்

கேரட் மகத்துவம்





கேரட்டை சிலர் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். சிலர் சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள்.
கேரட்டை சமைக்கும் போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகும். அதனால் தான் சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை சமைக்கும் போது தான் அதிகமான பலன் கிடைக்கும்.
பச்சையாக சாப்பிட்டால் கேரட்டின் தடித்த தோலால் அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவிகிதத்தை மட்டுமே நமது உடல் வைட்டமின் ஏவாக மாற்றுகிறது.
 
ஆனால் சமைத்து சாப்பிடும் போது இது 50 சதவிகிதமாக அதிகரிக்கும். எப்படி சாப்பிட்டாலும் அதன் மேல் தோலை சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிடுங்கள்.
இந்த பகுதிகளில் தான் கேரட் செடி வளருவதற்காக தெளிக்கும் பூச்சிக் கொல்லிமருந்து அதிகமாக தேங்கி நிற்குதாம்.

Tag :  கேரட்,கேரட்,கேரட்,கேரட்,கேரட்,கேரட்,கேரட்

திராட்சையின் மருத்துவ குணம்




ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.

உயிர்ச்சத்து தரும் காய்கறி-பழங்கள்



இன்று நாம் சந்திக்கும் ரத்தக் கொதிப்பு, இதயநோய், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் ஒரு நூறு வருடத்திற்கு முன்பு கிடையாது. ஏனெனில் அவர்கள் இயற்கையுடன் இழைந்து வீழ்ந்து, இயற்கையான உணவு களையும், கை குத்தல் அரிசியும் சாப்பிட்டனர்.

ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சியினால் உணவை பதப்படுத்துதல், அதை பாதுகாத்தல் என்ற பெயரில் அதிலுள்ள சத்துக்கள் குறைவதுடன், அதன் ருசியை அதிகரிக்க கொழுப்பு, உப்பு சேர்க்கத் துவங்கி, அந்த கலாச்சாரம் இன்று உலகெங்கும் தலை விரித்து ஆடுகிறது. ஆரோக்கிய சீரழிவை ஏற்படுத்துகிறது.

நம் நாட்டில், அதிக கலோரி உள்ள கோலா பானங்கள், வறுவல்கள், சிறு குழந்தைகளையும் அடிமையாக்கி, ஆரோக்கியத்தை கொல்கிறது. இதனை உணர்ந்துதான் 1980களின் நடுவில் இத்தாலியில் "ஸ்லோபுட்'' என்ற இயக்கம் துவக்கப்பட்டது. அதன் அடிப்படையே அந்தந்த ஊர் மக்கள் அவர்கள் ஊரில் கிடைக்கும் ப்ரெஷ்ஷான காய்கறி, பழ வகைகளையும் தானியங்களையும் உண்ண வேண்டும் என்பதுதான்.

அந்தந்த ஊரில் விளைந்த விளையும் பயிர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதுடன் பாரம்பரிய சமையல் முறைகளை ஊக்கு வித்து மக்களை ஜங்புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம். குழந்தைகளையும், வளரும் சமுதாயத்தையும் குறி வைக்கும் இதன் நோக்கம் வருங்கால தலைமுறை நோயின்றி வாழ வேண்டும் என்பது.

இரண்டாவதாக, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் உபயோகப்படுத்த வேண்டும். சற்றே பின்னோக்கி பார்த்தால் நம் முன் னோர்கள் பின்பற்றிய முறையும் இதுதான். அவரவர் ஊரில் அரிசி முதல் காய்கறிவரை எந்த ரசாயன உரமும் இன்றி விளைவித்து உண்டதால், நோய் நொடி எட்டிப்பார்க்க வில்லை.

இன்று நாம் நெல்லூர் அரிசி, பஞ்சாப் கோதுமை, ஆந்திரா மிளகாய் என பல இடங்களிலும் பல விதத்திலும் விளைந்த உணவுகளை உண்டதால், அவை வேறு இடத்தில் வளர்ந்ததால் நம் உடம்புடன் ஒத்துப்போவதில்லை. வேறு இடங்களில் விளையும், பழ வகைகள், காய்கறிகள், நம்மிடத்திற்கு வருவதற்குள் அதிலுள்ள உயிர்ச்சத்துக்கள் கழிந்து போய் நாம் உண்பது வெறும் சக்கை தான்.

இதற்கு அதிக விலை வேறு தருகிறோம். உதாரணமாக காஷ்மீர் ஆப்பிள் பல நூறு கிலோ மீட்டர் கடந்து உங்கள் டேபிளுக்கு வரும்போது அதன் சுவையும் சத்தும் குறைந்து விடுகிறது. அதற்கு பதில், நீங்கள் உங்கள் ஊர் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும், உயிர்ச்சத்து கிடைக்கும். அதிக செலவுமில்லை.

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

*நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்

உணவுப் பொருட்களின் மகத்துவங்கள்




நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.

ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை.

இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான். ஆதலால் நாம் சரியான உணவுப்பொருட்களை சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

1. கீரைகளை நீரில் நன்றாக கழுவி விட்டு சமைக்க வேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

2. இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

3. நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

4. பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தரும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதய நோய் வராது.

5. சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

6. தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள்


ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

மாதுளையின் மகத்துவம்!


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழத்தின் சாறு சிறுநீரகத்துக்கு
மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோயாளிகளுக்கும் நல்லது என்றும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி மாதுளம்பழம், ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் செயல்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில், மாதுளம் பழச்சாறு குடித்த நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பு கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

அன்னாசி பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெரும்.

திராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.


திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் . திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும்.சில வகைகளில் விதைகள் இருக்காது.

அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது

கற்பூரவள்ளி

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

சளித் தொல்லை நீங்க

மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

புகை பிடிப்பவரா ....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

பேரீச்சம் பழத்தின் பயன்கள்


பழங்கள் அனைத்திலும் மருத்துவக் குணம் உள்ளது.பேரீச்சம் பழம் மிகவும் சத்துள்ள பழமாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் ஆகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்,வைட்டமின் ஏ, பி, பி2, பி௫,இ என அனைத்து சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில 4 பேரீச்சம் பழத்தை ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து உண்டு வந்தால் உடல் நல்ல பலம் பெறும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் மாறும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் படி படியாக குறையும்.

பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். கண் பார்வைக் கோளாறுகளும் நீங்கும். குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலையும் மாலையும் கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைபடுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் மிகவும் குறைகிறது.இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.

மெனோபாஸ் காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் மிகவும் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலிகள் உண்டாகும்.

இதனை சரிசெய்ய, கொதிக்க வைத்த பாலில பேரீச்சம் பழத்தை கலந்து, பாலையும்,பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும். பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து தொடர்ந்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது

பழுத்தத் தக்காளியை தூக்கி வீசாதீங்க


நம்முடைய சமையலறையிலேயே நம்முடைய அழகிற்கான புதையல் இருக்கிறது. சமையலறையில், உபயோகமில்லாமல் தூக்கி வீசப்படும் சில பொருட்களைக் கொண்டு நம் அழகை எப்படி மேம்படுத்தலாம் என்று பார்ப்போமா?

தக்காளி:

சமையலுக்கு உபயோகப்படுத்த முடியாத தக்காளியை குப்பையில் போட்டுவிடுவோம். அதை சமையலுக்கு பயன்படுத்தமாட்டோம். ஆனால், அடுத்த முறை இத்தகைய தக்காளியைக் கண்டால் அதைத் தூக்கிப் போட்டுவிடாதீர்கள். அதை கூழாக்கி, முகத்தில் பேஸ்ட்டாக போட்டுக் கொள்ளலாம். அதிலுள்ள சி மற்றும் ஏ வைட்டமின்கள் முகத்தின் கரும்புள்ளிகளை நீக்குவதில், சிறந்த முறையில் செயல்படுகிறது.

பால்:

பாலை உபயோகித்துவிட்டு, பாத்திரத்தை சுத்தம் செய்வதற்காக போடுவதற்கு முன், அதிலிருக்கும் சிலதுளி பாலை, சிறிது பஞ்சில் எடுத்து நம்முடைய முகத்தை சீராக துடைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், நம்முடைய முகத்தின் துவாரங்கள் திறக்கும். முகம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் மாற இது உதவுகிறது. சிறிது தேன் கலந்து பூசினால், சிறந்த மாய்ஸ்டரைசராகவும் செயல்படுகிறது.

ஓட்ஸ் கூழ்:

சாப்பிட்டுவிட்டு எஞ்சிய ஓட்ஸ் கூழை தூக்கி எறிய வேண்டாம். அதை முகத்திற்கான மாஸ்க்காகவும் ஸ்கரப்பராகவும் பயன்படுத்தலாம். ஓட்ஸ் கூழை சிறிது பால் அல்லது தயிருடன் சேர்த்து, நன்றாக அரைத்து முகத்தில் தடவலாம். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் சுத்தமாகும்; முகம் உலர்ந்துவிடாமலும் பாதுகாக்கப்படும்.

ஆப்பிள்:


சாப்பிட்டுவிட்டு வீசப்படும் ஆப்பிளில் சிறிது சதைப் பகுதி இருக்கும். இதை வீணடிக்க வேண்டாமே. இதை அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் நீங்கும். அதோடு, ஆரோக்கியமான பளபளப்பையும் இது கொடுக்கும்.

வால்நட்:

நம் பிள்ளைகளுக்கு வால்நட் கொடுத்தால், அதை பாதி தின்றுவிட்டு போட்டுவிடுவார்கள். அதைத் துருவி பால் அல்லது பப்பாளி கூழுடன் சேர்த்து முகத்தில் தடவலாம். பாலுடன் சேர்க்கும்போது, அது முகத்தை பளபளப்பாக்குவதுடன் முகத்துவாரங்கள் திறப்பதற்கும் பயன்படுகிறது. பப்பாளியுடன் சேர்க்கும்போது, முகத்தை சுத்தமாக்குவதுடன் இறந்த செல்கள் உதிர்ந்து விடுவதற்கும், முகத்தின் தசை இறுகி, இளமையான பொலிவிற்கும் உதவும்.

ஆலிவ் எண்ணெய்:

தற்போது எல்லா வீடுகளிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மணம் போய்விட்ட எண்ணெயை நாம் பயன்படுத்துவதில்லை. நம்முடைய கால்களின் முடியை நீக்கியபின் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்யலாம். இதன்மூலம் கால்களில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் வெடிப்புகள் சரியாகும்