என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
கண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண் மை நன்மைகள்

 கண் மை - அதாவது இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படும் அழகுப்பொருள், கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. உலகத்தில் முதன் முதலாக பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மை தான்.


 தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் காஜல். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், 5000 ஆண்டுகள் முன்னர் தோன்றிய கண்மை, இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது.

கண்கள் வெள்ளை நிறத்தில் இல்லையா? பழுப்பு நிறத்தில் உள்ளதா - டிப்ஸ்


முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும். கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் ஏற்படுகின்றன
பழுப்பு கண்களை உடையவர்கள் அதற்கேற்ப மேக் அப் போட்டால் கண்களை அட்ராக்டிவாக காட்ட முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


பழுப்பு நிற கண்ணிற்கு மேக் அப்
பழுப்பு நிற கண்களுக்கு ஏற்ற ஐ ஷேடோவை வாங்கி பயன்படுத்தலாம். அடர் நிற ஷேடோக்கள் பழுப்பு நிற கண்ணிற்கு ஏற்றது. கருப்பு, நீலம், ப்ளு க்ரே, பர்ப்பிள் போன்றவை பழுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
ஐ லைனர், மஸ்காரா போன்றவை கருப்பு அல்லது சில்வர் ஷேடோவில் இருக்கவேண்டும். கீழே உள்ள கண் இமைக்கு திக்காக போடுவதன் மூலம் கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். மெட்டாலிக் நிறங்களான கோல்டு, காப்பர், சில்வர் ஐ ஷேடோக்கள் பளுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
லைட் கலர் ஐ லைனர் பயன் படுத்துவன் மூலம் கண்களை எடுப்பாக காட்டலாம். லைட் ப்ளு ஐ லைனர் பென்சில் கொண்டு கீழ் இமைகளில் லேசாக வரையவேண்டும்.
நமக்கு சரும நிறத்திற்கு ஏற்ற ஐ ஷேடோ பயன்படுத்துவது ஹைலைட் ஆகும். அதேசமயம் உதட்டிற்கு டார்க் கலர் லிப் கிளாஸ் பயன்படுத்தலாம். அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஐ மேக் அப் போட்டால் பழுப்பு நிற கண்கள் பக்காவாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மஞ்சள்காமாலை தடுக்கும் வழிமுறை





சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய் மஞ்சள் காமாலை.கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ என்ற வைரசின் தாக்குவதினால் மட்டுமே இந்நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள்காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும்.
ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
சிகிச்சை: உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும் போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பி வைரசால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.
இதற்காக வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கண்ணில் கருவளையமா?


 

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்...
*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.
*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.
*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.
 

கண்களுக்கு சில அழகு குறிப்பு

 
 
(1) பகலில் தூங்கக் கூடாது.இரவு தூக்கத்தை இழக்கக் கூடாது.


(2) அளவுக்கு மீறிய மனக்கவலைகளை வளர்த்து சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்ககூடாது.


(3) புகை பிடிக்கக் கூடாது.


(4) அடிக்கடி சுத்தமான நீரில் கண்களை கழுவ வேண்டும்.

(5) புகை,துகள்கள் அதிகமான வெளிச்சம் கண்களில் பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும்.


(6) எப்போதும் அழுதுக் கொண்டே இருக்கக்கூடாது.


(7) வெகு தூரத்திலும்,மிக அருகிலும் இருக்கும் பொருட்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.


(8) உடற்பயிற்சி செய்த உடனையோ,வெயிலில் அலைந்து விட்டு வந்த உடனையோ குளிர்ச்சியான நீரில் குளிக்காதீர்.


(9) சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.உடம்பு ஆரோக்கியத்தை பேணவேண்டும். 

 

க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா?


பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா?
நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன். ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன.


இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன. அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன.

இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம். ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன. அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல் ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி


கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம்
‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.


ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும். கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

கண்களை காக்கும் காய்கறிகள்


பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.

இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.