என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முகம் கழுவது எப்படி

தேவைப்படும் நேரம்:
30 நிமிடங்கள் தான்.
தேவையான பொருட்கள்:
1. தண்ணீர் – 2கப்
[அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்]  தண்ணீரை சேமியுங்கள்.
2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]

4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது,
சகோதரிகளிடமிருந்து வேண்டாம்
[முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்]
5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity.
கவனிக்க வேண்டியவை:
ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும்,
இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற
வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை.
1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக்
கொள்ளவும்
[மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.]
2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம்.
3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு..
உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது.
செய்முறை:
அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்,

இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை
தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும்,
ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும்.

உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக  நுரை
நீங்கும் வரை கழுவவும்,
ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும்.

எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக
மாற்றம் தெரியும், தெரியணும்.
ஏ. சீப்பை எடுத்து வாரவும்.

ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக
மாற்றம் தெரியும், தெரியணும்.
எப்பொழுது முகம் கழுவது நல்லது:
1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம்
2. கல்யாணமானவர்கள்,  காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம்
கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம்.
3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது
20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.

2 கருத்துகள்:

jayaseelan சொன்னது…

20 min face wash cha ,,,,,eppadi panurethu 20 min ple sollunga
,,,,,,my id jayaseelan150386@gmail.com,,,,,,
intha id ku ans pannuvenga nu ,,kathu eruppen
ple

Anbeashivam சொன்னது…

அன்பு நண்பரே !
கிரீம் என்பது .. உங்கள் தோலின் தன்மையை பொருத்தது ..
அதனால் உங்களுக்கு எது சிறந்ததோ ! அதை உபயோக படுத்துங்க ..
முகத்தை கழுவது பெரிதல்ல..
முகத்தை கழுவும்போது மேல்நோக்கி மசாஜ் கொடுப்பதே .. சிறந்தது ...
நேரம் கிடைத்தால் பப்பாளி பழத்தில் தேன் கலந்து மசாஜ் பண்ணுங்க ..
வெள்ளிரிக்காய் யை தாராளமாய் சாப்பிடுங்கள் ..
பாதாம் கொட்டை தினம் 3 அல்லது 4 சாப்பிடுங்கள் ...
தினம் 3 அல்லது 4 கேரட் சாப்பிடுங்கள் ...
நிச்சயம் மாற்றம் தெரியும் ...
................வாழ்த்துகள் ........................