என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஜிம்மில் எது என்ன ஏன்?

1உடல் உறுதி - உறுதி!

‘‘எனக்கு இரண்டு மாதத்தில் கல்யாணம். ஓவர் வெயிட்டா இருக்கேன். உடனே வெயிட்டைக் குறைக்கணும்...’’ ‘‘டெலிவரிக்கு அப்புறம் உடம்பு பெருத்துடுச்சு. டிரெஸ் எல்லாம் டைட்டா இருக்கு. உடம்பைக் குறைக்கணும்...’’ ஒரு முடிவோடு ஜிம்முக்கு செல்பவர்களா நீங்கள்? ‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்?


2. வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச்

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம். இதே போல் கிதீ தீமீஸீநீலீ என்ற இயந்திரமும் தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

3.கலோரிகளைக் குறைக்க ட்ரெட்மில்

ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. இதன் உதவியால் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்கலாம். நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது. ஜிம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே இதை வைத்திருப்பார்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து பயிற்சி செய்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் இப்பயிற்சி செய்வது நல்லதல்ல. மூட்டுவலி வரும் அபாயம் உண்டு.

4.எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட்

பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி, பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும். அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான சாய்ஸ். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் எடை குறையும். ஃப்ரெஷ்னெஸ் கிடைக்கும்.

5. முதுகு, தண்டுவட உறுதிக்கு ஹைப்பர் எக்ஸ்டென்ஷன்

இந்த இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதி செய்யும் எக்சர்சைஸ். எல்லா வயதினருக்கும் ஏற்றது. டூவீலர் ஓட்டும் பெண்கள், இதனைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

6. கலோரி மைனஸுக்கு எலிப்டிக்கல் ஃபிட்னஸ் க்ராஸ்

இருந்த இடத்தில்,நின்றபடி சைக்கிள் ஓட்டும் பயிற்சி. உடலின் மொத்த பாகங்களும் செயல்படுவதால் நல்ல எக்சர்சைஸ். கலோரியை குறைக்க
உதவுகிறது. எந்த வயதினருக்கும் ஏற்றது.

7.ஃபிட்னஸுக்கு ஸ்பின் சைக்கிள்

இருந்த இடத்தில் சைக்கிள் ரேஸ்! 10 நிமிடப் பயிற்சியில் 100 கலோரி வரை குறைக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கும் ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் சரியான சாய்ஸ்.


8.வீகைகள், தோள்கள் வலுவாக

பைசெப்ஸ் கர்ல் கைகளை நீட்டி, மடக்கும் பயிற்சியை இந்த இயந்திரத்தில் செய்யலாம். எளிதாகச் செய்ய, கடினமாகச் செய்வதற்கு ஏற்ப ப்ரோக்ராமை மாற்றி வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள சதைகளை குறைக்கும். தோள்களுக்கு பலம் தரும். சிக்கென்ற தோற்றம் தரும். தினமும் 15 நிமிடங்கள் செய்தால் போதும்.

10. தொடைச் சதை குறைய

லெக் எக்ஸ்டென்ஷன். லெக் கர்ல் காலை நீட்டி, இந்த இயந்திரத்தில் உள்ள நீளமான வெயிட்டுக்கு அடியில் கொடுத்து மேலே தூக்கிக் கீழே இறக்கும் பயிற்சி. தொடை, பின்புறம் பெரிதாக இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம். சரியாகப் பயிற்சி செய்தால் நல்ல ரிசல்ட் உடனே கிடைக்கும். செய்வதற்கு எளிது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது.

11.அகண்ட தோளைக் குறைக்க ஷோல்டர் ப்ரெஸ் இயந்திரத்தின் மேலே இருக்கும் இரு கைப்பிடிகளையும் பிடித்து மேலும் கீழும் இழுக்கும் பயிற்சி. தோள்கள் அகலமாக இருக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் குறையும். முதுகுக்கும், தோளுக்கும் பயிற்சி கிடைப்பதால் விரைவில் பலன் தெரியும்.

12. மார்பகத் தளர்ச்சி நீங்க

செஸ்ட் ப்ரெஸ் அமர்ந்த நிலையில், இருபக்கமும் இருக்கும் லீவரை முன்னும் பின்னும் இழுக்கும் பயிற்சி. மார்பகங்கள் தளர்ந்து போகாமல் இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் இந்தப் பயிற்சியைச்செய்யலாம். தினமும் 20 நிமிடம் செய்தால் போதும்.

13. ஆல் இன் ஆல் ஸ்விஸ் பால்

இந்தப் பந்தைக் கொண்டு பல பயிற்சிகள் செய்யலாம். முதுகுக்கு, கால்களுக்கு, வயிற்றுக்கு என உடல் முழுமைக்கும் தனித்தனிப் பயிற்சிகள். கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இந்தப் பந்து வரம். முதுகு வலியைப் போக்க, எடை குறைய, வயிற்றுப் பகுதியை கச்சிதமாக வைக்க என பல பலன்கள் உண்டு. எளிதாகப் பயன்படுத்தலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது.

கருத்துகள் இல்லை: