என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முகம் பளபளக்கநமது அன்றாட வாழ்வில் 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை, எப்போதும் ஒரே பரபரப்பு ஒரே ஓட்டம் தான், இதை தான் ஆங்கிலத்தில் Machine Life என்று சொல்லுவார்கள்.
இதை போல் நாம் உட்கொள்ளும் உணவும் வேகமாகவே நடைபெறுகிறது. இதனால் நமது சருமம் சுருங்கி இளம் வயதினர் கூட பெரியவர்கள் மாதிரி தோன்றுகிறார்கள்.
நேரங்கெட்ட நேரத்தில் வேலை, காலையில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாசாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறி வருகிறது.
பாஸ்ட்புட் உண்ணுவதாலும் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் போய் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை அடைகின்றனர் இளம் தலைமுறையினர்.
இதற்கு தீர்வு காண ஒரு சிறந்த முறை நாம் சாப்பிடும் உணவு முறையை மாற்றி கொண்டால் போதும்.
1. காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் சத்து அதிகம் உள்ளதால் முகச்சுருக்கத்தைப் போக்கும்.
2. கறிவேப்பிலையிலுள்ள வைட்டமின் ஏ இளமையான சருமத்தைத் பராமரிக்கும், அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் முகச்சுருக்கம் அறவே போய்விடும்.

3. இளமைக்குப் பாதுகாப்பு தரும் துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
4. வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையடையும், அது மட்டுமின்றி முகச் சுருக்கமும் மறையும். வாரத்திற்கு இரண்டு தடவை ஆரஞ்சு மற்றும் கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பொன் நிறமாகும்.

5. நல்லெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவி வர முகம் புத்துணர்ச்சியடையும்.
6. இதே முறையை ஆலிவ் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தியும் செய்யலாம் முகத்தில் இளமையாகவே இருக்கும்.

TAG : முகம் பளபளக்க ,முகம் பளபளக்க ,முகம் பளபளக்க ,முகம் பளபளக்க 

கருத்துகள் இல்லை: