என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

கால் வெடிப்பில் இருந்து விடுதலை

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல, கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.
இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்­ரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.
வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.
மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.
உருளைக்கிழங்கை உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.
சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கண்டிப் போவது சகஜம். டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கண்டிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

முக பளபளப்பிற்க்கு





*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.. 

*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

எளிமையான அழகுக்கு சில டிப்ஸ்

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை 

முடி வளர


*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.

*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.

*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.

சுருக்கமில்லாத முகம்

பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது "பாஸ்ட் புட்" வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள்.

சுருக்கமில்லாத முகம் விரும்புபவர்கள் கவனமா கேட்டுக்குங்க...

அந்தந்த சிசனில் கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோளில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது.

வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவை தான் பெண்களின இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ, வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் (Amla) போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, இளமையின் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சிரகத்துடன் வேகவைத்து மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டு வர உடல் குளுமையாக இருக்கும். அதோடு இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி விடும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.

மசாஜ்: நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கமா அது எங்கே என்பீர்கள்.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் "ஏ" இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிற

முழங்கையை "பளிச்" ஆக்க...!

பெண்கள் பலர் நாற்காலியில் ஒரே பொசிஷனில் அமர்வதுண்டு. இப்படி அமர்ந்திருந்தால் முட்டிகள் உராய்ந்து கறுத்துப் போகும். நாற்காலியில் வியர்வை படாமல் பார்த்துக் கொண்டாலும், முட்டி கறுப்பாகாது. நாற்காலியின் கைப்பிடிகளின் மீது டவலையோ அல்லது வெல்வெட் துணியையோ போட்டும் உட்காரலாம். இதனால் கைமுட்டி உராயாமல் இருக்கும்.

முட்டியின் கறுப்பு நிறத்தை அகற்ற...

4 தேக்கரண்டி ஆரஞ்சுத் தோல் பவுடரை, 4 தேக்கரண்டி பாலில் ஊறவைத்து கலந்து கொண்டு முட்டியில் பூசி லேசாகத் தேய்த்து விட்டு, 10 நிமிடங்களுக்குப் பின் தண்ணீரில் கழுவி விடலாம்.

மாய்சுரைசர்-கிரீம்கள், வாசலைன் (vaseline) மாதிரியான கிரீம்களை பூசுவதாலும் முட்டியின் கறுத்த நிறம் போய் விடும் என்கிறார் சித்த மருத்துவர் தி.வேணி! 

நக அழகு பராமரிப்பு 

நகங்களில் ஈரப்பசை பற்றாக்குறையுடன் காணப்பட்டால் அவை உடைந்து, சிதைந்து போய் விடும். இந்த நகங்களை மர ஸ்டிக்கினால் (நெயில்கட்டரில் ஷேப் செய்ய பயன்படுத்தும் பகுதி போன்றது) தேய்த்து சரி செய்யவும்.

நகங்களில் கட்டாயமாக ஆலிவ் எண்ணை அல்லது பாதாம் எண்ணை தொடர்ந்து தடவி வந்தால் சிதைந்த நகங்களும் கூட உயிர் பெறும். நம்மூரில் பெண்கள் பலர் நகங்களில் பாலிஷ் போடுவதுண்டு. விருந்து விழாக்களுக்கு போகும் பெண்கள் நகங்களில் அழகான டிசைன்கள் போடலாம். இதுதவிர நகத்தில் கற்களைப் பதித்து அசத்தலாக அலங்காரம் செய்யலாம். இப்படி செய்தால் செம அழகாக ஜொலிப்பீர்கள்.

சாதாரணமான நகங்கள் என்பது பிங்க் கலரில் பள, பளவென இருக்கும். ஆனால் துணி துவைக்கும் சோப், உப்புத் தண்ணீர் போன்றவை இந்நகங்களில் அடிக்கடி பட்டால் நகம் உடைந்து விட வாய்ப்பு அதிகம். இவற்றை பாதுகாக்க ஒரு சூப்பர் யோசனை.

வாரத்தில் 3 நாட்களாவது இரவு படுக்கும் முன்பு 1 டீஸ்பூன் சர்க்கரையுடன் 4 டீஸ்பூன் தேன்கலந்து நகங்களில் தடவிக் கொள்ளவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவி வர, சாதாரண நகங்கள் தகதக ஜொலிப்புடன் அழகாக இருக்கும்.

அழகு குறிப்புகள்:ஸ்லிம்மான இடைக்கு


ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வேலைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள்ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் தெரிந்துகொள்வது அவசியம்.

கலோரி:

பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர்ப்பது?

பருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.

புரதம்:

பருவ வயதில் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் உடலில் உள்ள ஹார்மோன், என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடவும்.

தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பாயசம் சாப்பிடவும்.

சோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு (பாதாம், முந்திரி) வகைகளை சாப்பிடலாம்.

இரும்புச் சத்து:

தினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம்.

சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடிக்கலாம்.

உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.

முளை கட்டிய பயறு மற்றும் வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

கால்சியம்:

கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.

தினமும் ஒரு லிட்டர் பால் குடிப்பது அவசியம்.

வாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

ராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது.

அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.
நன்றி சுஜீதா செந்தில்குமார்

அதிகம் கூந்தல் உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். 

கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். 

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்

அழகு குறிப்புகள்



1 பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெ;யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.
2 சாதம் வடித்த கஞ்சியும், வெந்தயமும் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் தரும்.
3 கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.
4 வெதுவெதுப்பான பாலில் நனைத்த காட்டன் துணியை கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும்.
5 பருக்கள் மறைவதற்கு ஆரஞ்சுச்சாறுடன் கொத்தமல்லி இலைச்சாறும் முல்தானிமட்டியும் கலந்து தடவலாம்.

எளிய அழகு குறிப்புகள்


சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். 

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும். 

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும். 

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும். 

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும். 

தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால்
ஏற்பட்ட வடு மறையும். 

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச்
சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். 

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும். 

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்
பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன்
கிடைக்கும். 

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும். 

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து
தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை
நிறம் மறையும். 

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும். 

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும். 

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும். 

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி
சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்
கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு
நிறப் புள்ளி மறையும். 

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம். 

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும். 

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்
முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்
மறையும். 

கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10
சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து
பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி
கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது. 

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து
முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக
இருக்கும். 

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,
தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,
வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில்
வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்
வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில்,
தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி
கருமையாகும், பொடுகு நீங்கும். 

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.
பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை
உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட
வேண்டும். 

புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய
புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக்
கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை. 

*நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 

*லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும்,
பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும். 

*காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை
பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில்
கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க்
போன்ற நிறங்களை பயன்படுத்தலாம். 

நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக
இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக
இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள்
இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும். 

*சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான
வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால்,
பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ்
என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும். 

*ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே
பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது
ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது. 

*உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு
கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள்
உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய
வேண்டும். 

*மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ வேண்டும்.
கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை
போல் தோற்றம் கிடைக்கும். 

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

*நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்