என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆண்களுக்கும் உண்டு அழகு இரகசியங்கள்!




பெண்களுக்கு மட்டும் தான் அழகு இரகசியங்கள் இருக்கிறதா என்ன-?ஆண்களுக்கும் இருக்கின்றது.நீங்களும் உங்களை அழகு

படுத்தி கொள்ளும் ஆண் என்றால் உங்களுக்கான அழகு குறிப்புகள் இதோ

முகம்

*பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதே இல்லை.அவர்களை பொருத்த வரையில் முக அலங்காரம்

என்பது ஷேவ் செய்வதும் மீசையை அழகு படுத்தி கொள்வது மட்டுமே

*நீங்கள் முகசவரம் செய்து கொள்வது மட்டும் அல்லாமல் பேசியல் செய்து கொள்ளலாம்.முகத்திற்கு க்ரிம் தடவி உங்களை

அழகு படுத்தி கொள்ளலாம்.அவ்வாறு முகபள பளப்புடனும் ஜொலிப்புடனும் இருக்கின்ற ஆண்களை தான் பெரும் பாலும்

பெண்கள் விரும்புகின்றனர் எனவே கொஞ்சம் முகசவரம் செய்து கொண்டு முகத்தை அழகு படுத்திடுங்கள்

சருமம்

*பெண்களை பொறுத்த வரையில் ஆண்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் கவனம் செலுத்துவதே இல்லை.பெண்கள் ஆண்மை

தன்மையை மட்டும் விரும்புவது இல்லை.அழகிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.சில ஆண்களுக்கு முக
சுருக்கங்களும் பருக்களும் அவர்கள் அழகையே கெடுத்து விடும்.நீங்கள் உங்களுக்கான க்ரிம்களை தடவி உங்கள் சருமத்தை அழகு படுத்திடுங்கள். நீங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்துங்கள்பின்பு பெண்கள் உங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்

அழகு சாதனப்பொருட்கள்

*நெயில் பாலிஸ் லிப்ஸ்டிக் ஐப்ரோ வாசனை திரவியங்கள் என அனைத்து பொருட்கள் இருந்தாலும் ஆண்கள் அதன் மீது

ஆர்வம் கொள்ளுவது இல்லை.ஆண்கள் அளவோடு அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை

அழகோடு வைத்திருக்கும்

பற்கள்

*முகத்திற்கு புன்னகை சேர்க்கும் விதமாக விளங்குவது பற்கள். அப்பற்களை எவ்வளவு சுத்தமாக பாதுகாத்து கொள்ள

வேண்டும்.ஆனால் புகைபிடிப்பது காபி டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்கிறார்கள்

*பற்களின் நிறத்தை பளிர்நிற வெண்மைக்கு கொண்மைக்கு கொண்டுவர பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன.தினமும்

இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது. கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல

ஆர்வம் காட்டுகிறார்கள்.

*கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக

இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது

அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

*எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று

வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால்

போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள்.

அணிகலன்

*எல்லோரிடமும் கல கலப்பாக பேசுங்கள்.நல்ல பேச்சாளன் என்ற பெயரை வாங்குங்கள்.அப்போதுதான் நீங்கள் ஒரு

இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

எடையை குறைக்க எட்டே வழிகள்!




காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

1.தினசரி காலை எழுந்தவுடன், 1 - 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.
3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.
4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
5. காலை சிற்றுண்டி (8.00 - 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.
6. மதிய உணவு (12.00 - 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.
7. இரவு உணவு (7.00 - 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.
8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.


கொழு கொழு கன்னத்திற்கு 'சப்போர்ட்' தரும் சப்போட்டா!




சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

தோற்றப்பொலிவு தரும்

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கொழு கொழு கன்னங்கள்

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.

தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி?



1. தலைவலி 2. ரத்த அழுத்தம் 3. சோகை 4. கீல்வாதம் 5. பொதுவான பக்கவாதம் 6. ஊளைச்சதை 7. மூட்டுவலி 8. காதில் இரைச்சல் 9. இருதயத் துடிப்பு 10. மயக்கம் 11. இருமல் 12. ஆஸ்துமா 13. சளி 14. காச நோய் 15. மூளைக் காய்ச்சல் 16. க ல்லீரல் நோய்கள் 17. சிறு நீரகக் குழாய் 18. பித்தக் கோளாறுகள் 19. வயிற்றுப் பொருமல் 20. ரத்தக்கடுப்பு 21. மூலம் 22. மலச்சிக்கல் 23. உதிரப் போக்கு 24. நீரழிவு 25. கண் நோய்கள் 26. கண் சிவப்பு 27. ஒழுங்கற்ற மாதவிடாய் 28. வெள்ளை 29. கருப்பை புற்று நோய் 30. மார்புப் புற்றுநோய் 31. தொண்டை சம்பந்தமான நோய்கள் நம்ப முடியவில்லையா?

மீண்டும் சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? ஜப்பான் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தியே. அங்குதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பானில் உள்ள நோயாளிகள் சங்கம்தான் இதை வெளியிட்டிருக்கிறது.

சரியான முறையில் சாதாரண குடிநீரைக் குடிப்பதால் அது மனித உடலைச் சுத்தம் செய் கிறது. அது உடலை வலு வாக்குகிறது. மருத் துவத் தொழிலில் ‘‘ஹெமடோ பைசீஸ்’’ என்று சொல் லப்படும் முறைப்படி அது புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் பகுதி முழு வதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையின் மூலம் குடலின் பகுதியிலுள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்னும் உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. குடல் பகுதியிலுள்ள இந்தத் திசு மடிப்புகளால் சாப்பிட்ட அன்ன ரசத்தின் சாரமானது உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் இதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

குடல் சுத்தமாக வைக்கப்படும்போது தினந்தோறும் பல தடவை சாப்பிடும் ஆகார வகைகளின் காரமானது இந்தத் திசு மடிப்புகளால் உறிஞ்சப்பட்டு அது புது ரத்தமாக மாற்றப்படுகிறது. இப்புது ரத்தமானது நோய்களைக் குணப்படுத்தி மீண்டும் புது ஆரோக்கிய நிலையைக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் அதிமுக்கியமானது. அதற்காகத்தான் தண்ணீரை முறையாக அ ருந்துவது அவசியம் ஆகிறது.

தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி?

காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி, தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு, சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது. இரவிலேயே பல்துலக்கிக் கொள்வது நல்லது.

நடக்க முடியாத அளவு பலவீனமாகப் படுக்கையில் உள்ளவர்கள் சுவாசத்தை வேகமாக வயிற்றுப் பகுதியின் மூலம் சில தடவை இழுத்துவிட்டு எஞ்சியுள்ள தண்ணீரைக் குடித்துவிடலாம். இம் மாதிரி குடித்த தண்ணீர் குடற்பகுதிக்குச் சென்று மு ன்னர் விளக்கியுள்ளபடி பழைய ரத்தத்தைச் சுத்தம் செய்து, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. தொடக்கத் தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

சோதனைகள் மூலமாகவும், அனுபவ பூர்வமாகவும் பின்வரும் நோய்கள் குறிப்பிட்டுள்ள காலத்தில் குணமாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மலச்சிக்கல் 1 நாள்; வயிற்றில் பித்தம் மற்றும் வாயு பொருமல் 2 நாட்கள்; சர்க்கரை வியாதி - 7 நாட் கள்; ரத்த அழுத்தம் வாரங்கள். புற்று - 4 வாரங்கள், காச கல்லீரல் நோய் - 3 மாதங்கள்.

முக்கிய குறிப்பு

மூட்டு வாதம், வாயுப் பிடிப்பு முதலிய நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை மற்றும் மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீர் சிகிச்சையைச் செய்து வர வேண்டும். ஒரு வாரங்கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து, பிறகுதான் தண்ணீர் அருந்த வேண்டும்.

படுக்கைக்குச் செல் லும் முன்பு காபி, தேநீர், போன்ற பானங்களையோ வேறு எவ்வித நொறுக்குத் தீனிகளையோ சாப்பிடக் கூடாது.

நடைப்பயிற்சியின் அவசியம்



நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.

நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.

பசிக்க 7 வழிகள்.



ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

*சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

*சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

*சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

*எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்



மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.

1. வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

ஆள்பாதி ஆடைபாதி, அழகை அதிகரிக்க சில யோசனைகள்!!



ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.
கம்பீர அழகு
வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.
கவலை ரேகை வேண்டாம்
மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!
மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!
சத்தான உணவு தேவை
காலையில் சீக்கிரம் எழுந்து லேசான உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜுஸ். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும். பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு, அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.!
ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.! முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் பின்னழகை கூட்டும்.!
கட்டமைப்பான உடல்
பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு அதைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது. இடையை விட தொடைகள் 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது. உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை.
உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது உறுப்புகள் சரியாக இருந்தால் அழகுதான்!.
கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.
ஆண்களுக்கும் அழகு
பெண்களைப் போலவே ஆண்களும் அழகியல் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களை விட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்த காட்டுவதில்லை.
வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

ஆண்களே உங்களுக்கு

(1) உங்கள் மனைவிக்கு சின்னச்சின்ன
வீட்டு வேலைகளில் உதவுங்கள்..
(2) நான் என்ன சொன்னாலும் என் கணவர் 

கேட்டுக்கொள்வார்
என்று பெருமையாகக் கூறுவதைத்தான் 
பெண்கள் விரும்புகின்றனர்.
அதனால் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.

(3) வீட்டில் எப்போதும் சிரித்த முகமாகவே இருங்கள்
(கஷ்டமான ஒன்று).இது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

(4) அவர்களது சமையலைப் பாராட்டிப் பேசுங்கள் (நிதானத்தில்)
உங்கள் அம்மாவின் கைப்பக்குவம் என்று ஒரு புளுடா விடுங்கள்.
அவள் உச்சி குளிர்ந்து போவாள்.

(5) கடையில் சென்று என்ன பொருள்
வாங்கினாலும் மனைவியை அழைத்துச் செல்லுங்கள் (புடவைக்கடை,நகைக்கடை ஐ தவிர்க்கவும்).

(6) அடிக்கடி நீ அழகாய் இருக்கிறாய் என்று 
(சொல்வது சரியான கடினம்) சொல்லிப்பாருங்கள்.
அதன் பின்பு உங்கள் வாழ்க்கையே ஆகா…ஓகோ…

தாய்ப்பால் கொடுத்தால் ரத்த அழுத்தம் வராது

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு
குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை
தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
என்பது டாக்டர்கள் கூறும் அறிவுரை.
ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு 
இளம் தாய்மார்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், 
தாய்ப்பால் கொடுத்தால்
உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது 
என்பது
தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, 50 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பெண்களிடம்
அமெரிக்காவில் ஆய்வு நடந்தது. அப்போது, 
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த
பெண்களை விட 
கொடுக்காத பெண்களுக்கு பின்னாளில்
உயர் ரத்த அழுத்த நோய் 
அபாயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
தாய்ப்பால் கொடுப்பதால்
வேறு சில நன்மைகளும்
தாய் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.