என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முன்னழகு ரகசியம்


 

சில பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப்ப மார்பக வளர்ச்சி காணப்படாது. அதை நினைத்து கவலை வேண்டாம். உங்களுக்காக சில டிப்ஸ்....

இன்று சில பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தன் மார் அழகு கெட்டுவிடும் என்று பால் கொடுப்பதை தவிர்த்துவிடுறாங்க. இதுதவறான கருத்து. சரியான முறையில் உள்ளாடை அணிந்தும், உடற்பயிற்சிகள் செய்தால் சரி செய்துவிடலாம்.

வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சிக்கு:
* சில பெண்களுக்கு மார்புகள் சிறியதாக இருக்கும் அவங்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய சின்ன சின்ன உடல்பயிற்சிகள் செய்து சரிசெய்யலாம்.
* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.
கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.
* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.
* மார்ப்புகளுக்கு என்று மருத்துவரின் ஆலோசனையின் படி breast developing cream வாங்கி மார்பில் தடவி மசாஜ் செய்யவும். அல்லது வீட்டிலே பாலாடையும் தேய்து மசாஜ் செய்யவும். விளம்பரங்களில் மயங்கி கண்ட க்ரீமை பயன்படுத்த வேண்டாம்.

* மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி தேய்க்க கூடாது.. வட்டமான முறையில் மசாஜ் செய்யவும்.
* உணவில் அதிகம் காய்கறிகள், கீரிம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்.

அளவுக்கு மீறிய வளர்ச்சி:* இந்த மாதிரி இருக்கும் பெண்கள் கட்டாயம் மசாஜ் செய்யக்கூடாது.
* இவற்கள் நடைபயிற்சி, வீட்டை துடைப்பது, துணியினை கையால் துவைப்பது போன்ற வேலைகளை செய்யவும்.
* அதிகமாக குறையும் என்று சொல்லமுடியாது. இது ஹார்மோன் பிரச்சனையால் தான் இந்த வளர்ச்சியிருக்கும் ஆகையால் மருத்துவரின் ஆலோசனை படி நீராவி சிகிச்சை அல்லது ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் சரியாக்கலாம்.
* அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடவும்.

சரிந்த மார்புக்கு:* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மார்புகள் சரிந்து அழகில்லாமல் இருக்கும் அவங்க கட்டாய்ம் எப்பொழுதும் உள்ளாடையினை சரியான அளவில் தேர்வு செய்து போடனும்.
* அதிக இருக்கமில்லாத உள்ளாடையினை போடவும்.
* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.
* கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.
* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.தொடர்ந்து இவ்வாரு செய்தால் சில நாட்களின் உங்களின் பிரச்சனைகள் சரியாகிவிடும்.

அழகு குறிப்புகள் சில




அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு.... இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?
ஆரோக்கியம்
* உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.
இயற்கை தரும் க்ளென்சர்ஸ்
* பால் நல்ல க்ளென்சர் (cleanser) என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.
* தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்தடவிக் கொள்ளலாம்.
* வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.
பளிச் முகத்துக்கு
* பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!
முகப் பொலிவுக்கு
* வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.
கருப்பு திட்டுகள் மறைய
* மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்... மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!
கருவளையம் மறைய
* கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.
சருமம் கருமை மாற
* முட்டைகோ ஸின் வெளிப்புற இலைகளை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
கழுத்தைப் பராமரிக்க
* நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் ( Olive oil) சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய "டபுள் சின்" நாளடைவில் "சூப்பர் சின்" ஆகிவிடும்!
முகத்தில் புதுப்பொலிவுக்கு
* தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.
* பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!
சிவந்த இதழ்களுக்கு
* சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!
நகங்கள் பொலிவு பெற
* பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.

பொடுகு, பேன் தொல்லையா?






பொடுகு தொல்லை.......
பொடுகு தானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலைமுடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

* நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

* நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

* தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

பேன் தொல்லை...........
முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர்வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனுடைய முக்கியமான உணவுத் தலையில் உள்ள ரத்தம் தான்.

*வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறியதும் அலசினால் பேன் போகும். வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் தலைமுடியை அலசினாலும் பேன் தொல்லை நீங்கும்.

*கருந்துளசி இலைகளை தலையணையின் மேலே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணியின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந்தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்துவிடும். சத்தான உணவு இல்லாமல், எப்படிப் பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத்தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கண்களுக்கு சில அழகு குறிப்பு

 
 
(1) பகலில் தூங்கக் கூடாது.இரவு தூக்கத்தை இழக்கக் கூடாது.


(2) அளவுக்கு மீறிய மனக்கவலைகளை வளர்த்து சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்ககூடாது.


(3) புகை பிடிக்கக் கூடாது.


(4) அடிக்கடி சுத்தமான நீரில் கண்களை கழுவ வேண்டும்.

(5) புகை,துகள்கள் அதிகமான வெளிச்சம் கண்களில் பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும்.


(6) எப்போதும் அழுதுக் கொண்டே இருக்கக்கூடாது.


(7) வெகு தூரத்திலும்,மிக அருகிலும் இருக்கும் பொருட்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.


(8) உடற்பயிற்சி செய்த உடனையோ,வெயிலில் அலைந்து விட்டு வந்த உடனையோ குளிர்ச்சியான நீரில் குளிக்காதீர்.


(9) சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.உடம்பு ஆரோக்கியத்தை பேணவேண்டும். 

 

தோல் சுருக்கத்தில் இருந்து விடுபட சில வழிகள்






சிலருக்கு இளமையிலேயே தோலில்
சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது 
போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி...
முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக
கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால்
 அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை 
எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
 இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும்.
இந்த கலவையை உடல் முழுவதும்
தேய்த்து குளிக்கவும்.
வாரம் ஒருமுறை இந்த கலவையை 
தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் 
தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

அடிக்கடி தலை வாரினால் முடி உதிருமா?

 
தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை
பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம்
செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெ
ந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்' தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.
விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.

தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கல
ரிங்' செய்வது தான்.

மாசு மருவற்ற முகம் பெற ..


பால் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 10 அல்லது
15 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும்.

 
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

முகப்பருவிலிருந்து விடுதலை









  • உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.
  •  
  • பருக்களைப் போக்குகிறோம் என்று கடையில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.
  • கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.
  • குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.
  • வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது நல்லது. உங்கள் தோலுக்கு உகந்த பேஷியல் கிரீம் எதுவென்று டாக்டரிடம் விசாரித்து அதைப் பயன்படுத்தலாம்.
  •  
  • எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.
  • மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.
  • கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

பொடுகில்லாத கூந்தலைப் பெற..

beauty tips in tamil - அழகு குறிப்புகள்




உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.