என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

பிடிக்குமா?



Do you like - Child Care Tips and Informations in Tamil
பிடித்ததைச் செய்யாவிட்டால் வாழ்க்கை "டல்"தான்!
நமக்குப் பிடித்த கலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால், வாழ்க்கை இருண்டு போகும். இது உண்மை. அன்றாட வாழ்க்கையில் 99 சதவீதம் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே செலவிடும் போக்கு நம்மிடம் உள்ளது. நமக்கென்று ஒரு நிமிடமாவது செலவழிக்கும் போது தான் நம்மை நாம் உணரத் துவங்குவோம். 99 சதவீத நேரத்தைக் கடமையாற்றச் செலவிடுவதைச் சற்றே தளர்த்தி, கடமைகளை நேரமறிந்து செய்து, நமக்கென்று நேரத்தை ஒதுக்கி தினமும் சந்தோஷம் கண்டால், வாழ்க்கை இனிக்கும்.
மாதத்திற்கு ஒரு நாள் "ரொட்டீனுக்கு" லீவு!
மாதத்திற்கு ஒரு நாள் ரொட்டீன் வாழ்க்கைக்கு "டாட்டா" சொல்லி உங்கள் குடும்பத்தினருடன் வெளியில் சென்று விடுங்கள். சினிமா, டிராமா என்று பார்க்கச் சென்றால், அவற்றின் கதைக்குள் "புகுந்து கொண்டு மனம் வெளியில்" வர மறுக்கும். இப்படி நேரத்தை வீணடிக்காமல், பார்க், பீச், கோயில், உங்களுடன் மனம் விட்டுப் பழகும் உறவினர் வீடு என்று செல்லலாம்.
இவை எதுவுமே போரடித்தால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுங்கள். உங்களை அறியாமல் புத்துணர்வு கிடைக்கும்.
பாட்டு பாட பிடிக்குமா? அரை மணி நேரம் ஒதுக்குங்கள்!
சிலருக்கு வாய் விட்டுச் சத்தமாய் பாடுவது பிடிக்கும். வேலை செய்தபடியே பாடுவது கை வந்த கலையாக இருக்கும். ஆனால், வேலையைக் "கோட்டை விட்டு" பாடுவது ஆபத்து. இதிலும் திறமையுடன், அதிலும் ஜமாய்க்கலாம் என்றால் பிரச்னை இல்லை.
பாட்டு கேட்க மட்டும் பிடிக்கும் என்று சொல்பவர்கள், ரேடியோவில் பாட்டு கேளுங்கள். "டிவி" வேண்டாம்.
இனிப்பு பலகாரம் செய்யுங்க!
சிலருக்கு சமைப்பது ரொம்பவே பிடிக்கும். மனசு பாரமாக இருந்தால், அன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்து சாப்பிடுங்க. அதுவும் செய்யப் பிடிக்கவில்லை எனில், ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுங்க. அவசரமாய் உள்ளே தள்ளாமல் சிறிது எடுத்து நாக்கின் நுனியில் வைத்து அதன் முழு ருசியையும் அனுபவித்துச் சாப்பிடும்போது மனசு பாரமும் ஐஸ்கிரீம் போல் கரைந்து விடும்.
ஆரஞ்சு கலர் உடை உடுத்திக் கொண்டால்...
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்? எதுவாக இருந்தாலும் ஆரஞ்சு நிற உடையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் தோல் நிறம் எதுவாக இருந்தாலும் போரடிக்கும் போது ஆரஞ்சு நிற உடையை உடுத்திக் கொண்டால், உங்களை அறியாமல் மனம் துள்ளத் துவங்கும்.
உடற்பயிற்சி செய்யுங்க!
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுதும் சுறுசுறுப்பாகவே இருப்போம்.
தூங்கி வழியும் பேர்வழிகளுக்கு இது கை கண்ட மருந்து. செய்யத் துவங்கும் வரை தான் சோம்பல்; செய்யத் துவங்கி விட்டால், மனமும், உடலும் புத்துணர்வு பெறும்.
குழந்தை பெற்றவர்கள் அவர்களுடன் கொஞ்சி மகிழலாம்!
திருமணமாகிக் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் முழுதும் அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்து, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யலாம். இதில் கிடைக்கும் சந்தோஷம் கடலைப் போன்றது.
இது போன்று, உங்களுக்கென பல விஷயங்களில் அக்கறை செலுத்தினால் சோர்வுக்கும், சோகத்துக்கும் "டாட்டா" சொல்வீர்கள்!

தூங்கும் முறை சரிதானா?



Sleep - Child Care Tips and Informations in Tamil
எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா? சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில் கவனியுங்கள்.
அமெரிக்கன் அகடமி ஆப் ஸ்லீப் ரிசர்ச் அமைப்பு (American Academy of Sleep Medicine - AASM), சில "டிப்ஸ்"களை தந்துள்ளது, இதோ:
* சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.
* அதற்காக "டிவி" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.
* படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், பத்து நிமிடம் வரை புத்தகம் படிக்கலாம். இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
* கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.
* தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.
* இரவில் காபி (Coffee), டீ (Tea), சாக்லெட் (Chocolate), கோலா (Cola) சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.
* படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர "குட்டித்" தூக்கம் மிக நல்லது

வீட்டிலிருந்தே சம்பாதிக்க



Earn mony to many way by home - Child Care Tips and Informations in Tamil
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?
அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா?
சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும். சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.
வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.
பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்- 1, தேங்காய் எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்.
பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும். (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன் றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.
டெடிபியர் செய்யலாமா?
முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால் களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும். உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள்.
தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.
முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.
கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது. உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.
கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை.
இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

இல்லத்தை அழகுபடுத்த...



Home Decoration - Child Care Tips and Informations in Tamil
சிறிய ப்ளாட்டில் வசிப்பவரா நீங்கள்? அதையே அழகாக வைத்துக் கொள்ளப் பிரியப்படுகிறீர்களா? அதற்கு கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருக்கவேண்டும்.
வீட்டின் நுழைவு வாயிலின் வலது மூலையில், டெரகோட்டா உருளியிலோ அல்லது வெண்கலத்தில் சற்றே அகன்ற ஏந்தலான பாத்திரத்திலோ, தண்ணீர் நிரப்பி, சிறு பூக்களை அடர்த்தியாய் பரப்பி விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் போதே புத்துணர்வூட்டும் மனதிற்கு சக்தியையும் அளிக்கும்.
தரையில் வட்ட வடிவ கார்பெட் போடுவதால் சிறு ஹாலின் அழகு பரிணமிக்கும்.
சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.
உங்கள் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். இரண்டு பெரிய விசிறிகளை அரை வட்ட வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.
ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.
டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது.
சமையலறை அலமாரியில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி தேவையான சாமான்களை நிரப்புங்கள்.
மிக்சி க்ரைண்டருக்கு மேடை மூலையில் இடம் கொடுங்கள். க்ரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளின் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.
இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம்.
சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த தேக்குக்கதவோடு பூஜைக்கான இடம் அமைக்கலாம்.

பால் திரிந்து போகாமல் இருக்க...



Kitchen Tips - Child Care Tips and Informations in Tamil
பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமால் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.
பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து, ஏற்றி வைத்தால், கொசுக்கள், பூச்சிகள் அண்டாது.
சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.
கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.
வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.
பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.
பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழே உரித்த பூண்டு, மையாய் அரைத்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை!
ஒருபொருள்... பல பயன்கள்!
மாவு சலிக்க, வெயிலில் பொருட்களை உலர்த்த பொட்டலம் கட்ட... என்று நாம் பல வகைகளில் பயன்படுத்தும் பழைய செய்தித்தாள்களுக்கு இன்னும் பல உபயோகங்களை சொல்லி அசத்தியிருக்கிறார்கள் நம் வாசகிகள்.
எப்போதாவது பயன்படுத்தும் ஃபிளாஸ்க்குகள், ஹாட் பேக்குகள், வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்றவற்றின் உள்ளே பேப்பரை சுருட்டி வைத்து விட்டால், சில நாட்கள் கழித்துத் திறந்தாலும் நாற்றம் இருக்காது.
கிருஷ்ணவேணி, சென்னை-26
வாழை இலை, மஞ்சள் கொத்து முதலியவற்றை பேப்பரில் சுற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
வீட்டுக்குள் செயற்கை செடிகளை வைக்கும்போது மணலுக்குப் பதிலாக செய்தித்தாள்களை கிரிக்கெட் பந்துகள் போல சுருட்டி, பூந்தொட்டியில் போட்டு விடுங்கள். மேலே சிறு சிறு கற்கள் போட்டு நிரப்பினால் தொட்டி அதிக கனமிருக்காது.
உஷா நடராஜன், சென்னை-4
ஜன்னல்களின் கண்ணாடிப் பகுதி அழுக்காக இருக்கிறதா? பழைய நியூஸ் பேப்பரை எடுத்து தண்ணீரில் நனைத்து, ஜன்னல் கண்ணாடி முழுவதும் மறையும்படி விரித்து ஒட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, துணியால் துடைத்து விட்டால் உங்க வீட்டுக் கண்ணாடி பளபளக்கும்.
கமலா ராஜகேசரன், பொள்ளாச்சி.
பட்டு மற்றும் டிசைனர் புடவைகளை பீரோவில் அடுக்கும் போது, நியூஸ் பேப்பர் சுற்றி, இடையில் உலர்ந்த வேப்பங்கொழுந்தையோ அல்லது வசம்புத்துண்டையோ வைத்து அடுக்கி விட்டால் பூச்சி, கறையான் போன்றவை கிட்டவே நெருங்காது.
வீட்டில் ஏ.சி பொருத்தும் இடங்களில் அல்லது கேபிள் ஒயர் நுழைக்கும் இடங்களில் இருக்கும் இடைவெளிகளில் நியூஸ் பேப்பரை நன்றாக சுருட்டி உள்ளே வைத்து, வெளியே நீட்டி கொண்டிருக்கும் பேப்பரைக் கத்தரித்து விடுங்கள். பின்னர் செல்லோ டேப் கொண்டு ஒரு வெள்ளைத் தாளால் அந்த இடத்தை மூடி விட்டால் பூச்சிகள் அடையாது.
பேப்பரை இரண்டு அங்குல அளவுள்ள சதுரங்கள் அல்லது செவ்வகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது டப்பாவின் வெளிப்புறம் கொஞ்சம் எண்ணைய் பூசிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரும் ஃபெவிகாலும் சேர்த்து கரைத்துக் கொண்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக அதில் தொட்டு டப்பாவின் மேல் ஒட்டி விடுங்கள். இப்படி டப்பாவின் வெளிப்புறம் முழுவதும் ஒட்டி அதன் மேல் கலர் பேப்பர் ஒட்டி அலங்கரித்து அப்படியே 12 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு பேப்பரை பிரித்தெடுத்தால் அந்த டப்பாவின் வடிவத்திலேயே பூஜாடி அல்லது பேனா ஸ்டாண்டு அழகாக நிற்கும்.

பாதுகாப்பு குறிப்புகள்!



The Protection Of Women - Child Care Tips and Informations in Tamil
பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர்
இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான் மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும் என்று கூற இயலாது. ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை பெண் பெற்றிருக்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் மூன்று காரணங்களால் எளிதல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
குறைவான விழிப்புணர்வு:
பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உடல் மொழி:
தலையை குனிந்துகொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக வைத்திருங்கள். மனித உடலில் புஜங்கள் தான் மிகவும் வலிமையானவை. எனவே, உங்களது கைகளும், புஜங்களும் தாக்குதலை தடுக்கவும், எதிர்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும்.
தவறான இடத்தில், நேரத்தில் இருத்தல்:
குறிப்பாக இரவு நேரங்களில் குறுகிய பாதையில் தனியாக செல்வதை தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டாயத்தின் பேரில் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். எந்த இடத்திற்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. தாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தில் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
காரில் கடைகள் உட்பட வெளியிடங்களுக்கு செல்லும் போதும், உண்ணும்போதும் திறந்த காரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. அப்போது மர்ம மனிதர்கள் காரில் ஏறி மிரட்டி உங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிடலாம். எனவே, காரின் கதவுகளை நன்கு மூடி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தனியாக அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

வெயிலுக்கு அதிக தண்­ர் குடியுங்கள்!



Avoid dehydration drink water! - Child Care Tips and Informations in Tamil
50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது. சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும். கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.
இந்த வெயில் காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைடிரேஷன் என்கிற நீர்ச்சத்தின்மை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
டீஹைடிரேஷன் ஆரம்ப நிலையில் இருந்தால் தண்ணீர் மற்றும் பழச்சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
அதனால், தண்ணீர் நிறைய குடியுங்கள். முக்கியமாக, அதை சுத்தமாக குடியுங்கள். இந்த சீசனில் என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள். வெயிலில் அதிக நேரம் அலையாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

எடை குறைக்க எளிய வழி....



அப்பப்பா.. இப்பவே நடக்க முடியல, படி ஏறி இறங்க முடியல, வயசாகிப்போச்சுல.. அதற்கு என்ன செய்ய விதிய கடனேன்னு கழிக்க வேண்டியதுதான்னு பேசுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கா? இப்பவே பெரிசு புலம்ப ஆரம்பிச்சிடுச்சு... வயசானா நமக்கும் இதே கதி தானா? இதற்கு என்ன தீர்வு வேற வழியே இல்லையா? ஏன் இல்லை. இதோ பிரமிக்க வைக்கும் எளிய வழிகள் - 18
வயது ஆக ஆகத்தான் நம் எல்லோருக்கும் வயது குறைந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆசை வருகிறது. முப்பது வயதும், முதல் நரை முடியும் கொடுக்கிற அச்சம் மரணபயத்தைவிட சற்று அதிகம் என்பதே ஆச்சர்யமாகவும், அபாயகரமான உண்மையாகவும் இருக்கிறது. எடை மெலிந்தும், மனம் லேசாகவும் எப்போதுமே இருந்தால் என்ன? என்ற ஆசை உலகம் முழுக்க மக்களை தூண்டில் போடுகிறது. பியூட்டி பார்லர்களிலிருந்து, காஸ்மடிக் சர்ஜரிவரை முடிந்தவர்கள் முட்டிப் பார்க்கிறார்கள். பலர் நமக்கு இவ்வளவுதான் என்ற ஆறுதலில், எந்த முயற்சியையும் செய்யாமல் முதுமையின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். வயது ஆனாலும் இளமையோடு இருக்க வழியே இல்லையா? அது ஜீன்களின் முடிவா என்று நடந்த சமீப ஆய்வுகள் 'இல்லை' என்ற சந்தோஷ செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றன. முதுமையின் அடையாளங்களை நமக்குக் கொண்டுவருவதில் 70 சதவிகித காரணங்கள் நம் வாழ்க்கை முறை என்கிறார்கள். அவற்றை சரி செய்தால் பத்து வயது குறைந்து இளமை சீட்டியடிக்கும் என்பதற்கு உத்திரவாதம் தருகிறார்கள். படியுங்கள்... பத்து வயதைக் குறையுங்கள்...!
இருபது வயதில் நீங்கள் இருந்த எடைக்குத் திரும்புங்கள்!
கடினமான முதல்வழி இது. ஆனால் இளமைக்கும், நீண்டநாள் வாழ்விற்கும் மிக முக்கியமான காரணம் - வழி இது என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு இளமையாகத் தோற்றமளிக்கிறீர்கள் என்பதற்கு ஒல்லியே நல்ல காரணம். அதிக எடையில் கொழுப்பு செல்கள் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறது. தவிர, இந்த கொழுப்பு செல்கள் உடலில் 'சைட்டோகைன்' என்கிற வஸ்துவை அதிகரித்து அது இரத்தக் குழாய், இருதயம் உட்பட பல்வேறு உறுப்புகளைக் கெட்டியாக்கிவிடுகிறது. அதிக கொழுப்பு புற்றுநோய்களுக்கும் ஒரு காரணம். ஒல்லியானவர்களுக்கு முதுமையும், மரணமும் 75 சதவிகிதம் தள்ளிப்போடப்படுகிறது என்பதால், எடை குறையுங்கள். உங்கள் திருமண ஆல்பத்தை எடுங்கள்... குறுகுறு சிரிப்பில் முகப் பொலிவுடைய அந்த எடைக்குத் திரும்ப முயற்சியுங்கள்.
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிடுங்கள்!
இதன்மூலம் நம் உடலுக்குத் தேவையான சரியான வளர்சிதை மாற்ற வேகத்தை அடைய முடியும். சரியான எடையைப் பாதுகாக்க முடியும். முழு உடல் நலத்தை அடைய முடியும். சரியான குறைந்த உணவை ஐந்து மணி நேரத்திற்கு குறையாத இடைவெளியில் எடுத்துக் கொள்ளும்போது உடலின் மெட்டபாலிஸம் மென்மையாக இயக்க முடிகிறது என்கிறார்கள். தேவைக்கும் குறைவாக சாப்பிடுவதும் நல்லதல்ல. சரியாகச் சொன்னால், உணவு இடைவேளையில் 150 கலோரி ஸ்நாக் ஆரோக்கியமானது. நல்லது.
இருதயத்திற்கான உடற்பயிற்சிகளோடு எடை தூக்கும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்!
நாற்பது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் 125 கிராம் தசை அளவு குறைந்து, அதற்குப் பதில் கொழுப்பு படிகிறது. எடை தூக்கும் பயிற்சிகளின் மூலம் இதைத் தடுக்க முடியும் என்கிறார்கள். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடை தூக்கும் பயிற்சி செய்தால் போதும். கூடவே உறுதியான எலும்புகள், சர்க்கரை நோய் வருகிற வாய்ப்பு குறைவு, நல்ல தூக்கம் மற்றும் சிந்தனை எக்ஸ்ட்ராவாக வருகிற பலன்கள்.
மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள்!
உங்கள் உள்ளே வைத்திருக்கிற வெறுப்பு அல்லது எதிரி மனிதனுக்கு எதையுமே செய்ய விரும்பாத மனம் இரண்டும் முதுமையின் தோழர்கள் என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவை வில்லியம் ப்ரௌன் - சைக்காலாஜிஸ்ட் - ப்ருனல் பல்கலைக்கழகம் - லண்டன் - வெளியிட்டிருக்கிறார் 'dog eat dog world' என்கிற மனநிலையில்தான் பலர் வளர்கிறார்கள். ஆனால் அன்பும், கருணையும் கொள்வது ஆரோக்கியமாக வைத்திருக்கும் மிகப்பெரிய எளிய கருவி என்பதை எவரும் உணர்வதில்லை என்கிறார்.
நல்ல சண்டை போடுங்கள்!
பொதுவாக கணவன், மனைவிக்குள் நடக்கிற மோசமான சண்டைகள் இரத்தக் குழாய்களின் முதுமையைத் தொடங்கிவிடுகின்றன என்று ஓர் ஆய்வில் உட்டா பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. கணவன், மனைவிக்குள் சண்டை போடாமல் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் எப்படி சண்டை போடுகிறீர்கள் என்பதே பாயிண்ட் என்கிறார்கள். மோசமான சண்டை போட்டு கிழவனாகவோ, கிழவியாகவோ ஆக வேண்டுமா என்று யோசியுங்கள்.
உங்களுக்கு வேதனை தரும் எதையும் நீண்ட நாட்களுக்கு மனதில் வைத்திருக்காதீர்கள்!
ஆய்வு முடிவுகளின்படி நீண்ட நாள் வலி, வேதனைகள் ஒரு கட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சரியாக இயங்க விடாமல் தடுத்து, ஆழ்ந்த மன இறுக்கம் உருவாகி, அதன்மூலம் மோசமான ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அதிகப்படுத்துகிறது. இது சட்டென்று முகத்தில் முதுமைக்கு வரவேற்பு கொடுத்துவிடுகிறது. இது தேவையா என்று யோசியுங்கள். உங்கள் வேதனையை மிக நெருங்கியவர்கள் மூலமோ அல்லது உங்கள் மருத்துவர் மூலமோ உங்களிடமிருந்து நீக்குங்கள்.
அரைமணிநேரம் நடங்கள்!
உங்கள் இரத்தக் குழாய்கள் மெல்ல ஒரு எளிய பந்துபோல வளைய வேண்டும் என்றால், ஒரு அரை மணிநேரம் வேக நடை நடங்கள். ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடந்தால் போதும். மனிதர்களின் இரத்தக் குழாய்களின் இளகு தன்மையை அல்ட்ராசவுண்ட் உதவியால் ஆய்வு செய்த டாக்டர் ஹிரோபியூமி - டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் - உறுதி செய்த தகவல் இது. வயது ஆக ஆக இரத்தக்குழாய்கள் பழைய டயர்போல இறுக்கம் கூடி மிருது தன்மை இழக்கின்றன. இதனைத் தடுத்தாலே உடல் முழுக்க இரத்த ஓட்டம் கூடி இளமை திரும்புகிறது.
ஒரு வளர்ப்பு பிராணியை கைக்கொள்ளுங்கள்!
வீட்டையும், இதயத்தையும் ஒரு செல்லப் பிராணிக்குத் திறந்துவிடுங்கள். இந்தச் செல்லப்பிள்ளைகளோடு நேரம் செலவிடுபவர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி, செல்லாமல் எப்போதாவதுதான் செல்கிறார்களாம். மன அழுத்தத்தால் ஏற்படுகிற நோய்கள் இவர்களுக்குக் குறைவாகவே வருகிறது என்கிறார்கள். இரத்தக் கொதிப்பைத் தடுப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும் இந்தச் செல்லப்பிராணி கொஞ்சல்கள் பயங்கரமாக உதவி செய்வதாகத் தெரிவிக்கிறார்கள்.
தோட்ட வேலை செய்யுங்கள்!
தோட்டமா? என்று சிரிக்கிறவர்கள் வீட்டில் ஒரு சின்ன ரோஜாச் செடியை வைத்துக் காப்பாற்றுங்கள். அறுவை சிகிச்சை முடிந்து ஜன்னல் வழி தெரிகிற ஒரு மரத்தைப் பார்க்கிறார்கள், சீக்கிரம் உடல் நலன் தேறுகிறார்கள். பார்த்தாலே இப்படி என்றால்?
மீன்களைச் சாப்பிடுங்கள்!
ஒமேகா 3 மற்றும் DHA இருக்கிற வகை மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடனடி இருதயச் செயலிழப்பு, ஹார்ட் அட்டாக், கண்பார்வை இழப்பு என பல முக்கிய அபாய கட்டங்களைத் தடுக்கின்றன. நல்ல கொழுப்பிலிருந்து மேலும் சில நல்ல பலன்களை அடைய கணோலோ ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். 2 கிராம் மீன் எண்ணெய் அதிக பலன்.
இசை கேளுங்கள்!
இரவில் நல்ல மனதுக்கு இதமளிக்கும் இசை கேட்பதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. நோய் எதிர்க்கிற ISA என்கிற ஆன்டிபாடி இசை கேட்பதால் அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. பித்தோவனின் 'மிஸ்ஸா சால்ம்னிஸ்' கேட்கும் போது அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 240 சதவிகிதமாம்.
கிரீன் டீ குடியுங்கள்!
ப்ராஸ்டேட் கான்ஸர், மார்பகப் புற்றுநோய் உட்பட மூன்று கப் கிரீன் டீ குடித்தால் நமக்குக் கிடைக்கிற ஹெல்த் பலன்கள் ஏராளம். அதிலும் கிரீன் டீயில் இருக்கிற பாலிபனால் இளமையின் திறவுகோல். ஆரம்பியுங்கள்.
வானவில்லைச் சாப்பிடுங்கள்!
சேர்த்தால் ஒரு வானவில்லின் வண்ணத்தைக் கொடுக்கும் பழங்களையும், காய்கறிகளையும் தினமும் இரண்டு கப் சாப்பிடுங்கள். நம்ப முடியாத இளமையைக் கொடுக்கக்கூடிய சக்தி இந்த காய்கனி பழங்களால் ஆன வானவில்லுக்கு உண்டு.
உணவில் மஞ்சள் சேருங்கள்!
மஞ்சள் என்பதில் 'குர்குமின்' என்கிற அதி அற்புத மந்திரம் ஒன்று அடங்கி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு, கேன்ஸர் எதிர்ப்பு உட்பட உடலைத் தளர்வடையச் செய்யும் ஃப்ரீ ரேடிகல்களை அழிக்கும் சக்தி கொண்டது.
வைட்டமின்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்!
500mg வைட்டமின் சி, 400 IOIU வைட்டமின் E, 800E துத்தநாகம், 15E பீட்டா கரோட்டின், 2E காலர் என்கிற அளவில் சில வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை முக்கியமாக கண்களைப் பாதுகாக்கின்றன. ஒளி படைத்த கண்களே இளமையின் அடிப்படை.
இரத்ததானம் செய்யுங்கள்!
ஒரு ஆரோக்கியமான மனிதன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம். உடலின் இரத்த உற்பத்தி பகுதிகள் சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் அடைந்து மறுபடியும் மறுபடியும் புதிய இரத்தம் உற்பத்தி ஆகும்.
வைட்டமின் 'E' சாப்பிடுங்கள்!
இது குறிப்பாக பெண்களுக்குத் தினமும் இரவில் 400E வைட்டமின் E எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் மற்றும் முடியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். 'I medeen' என்கிற பயோமெரின் மாத்திரை 50 வயது பெண்களிடம் நல்ல மாற்றத்தை உருவாக்குவதை ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
ஆழமான மூச்சை இழுத்து விடுங்கள்!
சாதாரண நிலை அல்லது டென்ஷன் என எப்போதும் சீரான இடைவெளியில் ஆழமான மூச்சை இழுத்து விடுங்கள். இதன்மூலம் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குவிவது கட்டுப்படுத்தப்படுகிறது. தியானம், ஆழ்ந்த மூச்சு, எழுதுவது, என எதில் மனம் லேசாகிறதோ முதலில் அதைப்பற்றி மெல்லமெல்ல ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிக்கு வந்துவிடுங்கள். இது ஒரு இரண்டு நிமிடம்தான். இதனைக் கீழ்கண்டவாறு செய்யலாம்.
செய்யும்முறை:
முதலில் வாய்வழி சுத்தமான காற்றை வெளிவிடுங்கள். பின் மெதுவாக மூக்குவழி காற்றை உள்ளிழுங்கள் ஒன்றிலிருந்து நான்கு எண்ணும் வரை. பின் அந்தக் காற்றை அப்படியே ஒன்றிலிருந்து ஏழு எண்ணும் வரை நெஞ்சுக்குள் வைத்திருங்கள். பின் எட்டு எண்ணும் வரை வெளியிடுங்கள். அவ்வளவுதான். இதை மூன்று முறை செய்தால் போதும்.

முகப்பருவிலிருந்து விடுதலை பெற......



Beauty tips to get rid of pimples - Beauty Care and Tips in Tamil
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது.
அத்தகையவர்களுக்குப் பருக்களைப் போக்க சில யோசனைகள்:
  • உணவில் கீரை மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.
  • பருக்களைப் போக்குகிறோம் என்று கடையில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.
  • கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம்.
  • குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.
  • வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வது நல்லது. உங்கள் தோலுக்கு உகந்த பேஷியல் கிரீம் எதுவென்று டாக்டரிடம் விசாரித்து அதைப் பயன்படுத்தலாம்.
  • எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.
  • மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.
  • கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

மேனியை மெருகூட்ட!



Beauty Tips For a glowing skin - Beauty Care and Tips in Tamil
அழகான பெண்கள் கூட படிப்பு, வேலை என வெளியில் சுற்றும்போது கருத்து விடுகிறார்கள். நேரமின்மையால் தங்களின் தோற்றம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால் ஆரோக்கியமான சருமம் வேண்டுமெனில் சிறிது நேரமேனும் அதற்காக மெனக்கெடுவதில் தவறில்லை.
வுட் லேம்ப் ஃபேஷியல்:
இதைச் செய்து கொள்ளுவதற்கு முன் அழகுக் கலை நிபுணரிடம் சருமத்தைக் காட்டி தங்களுடையது வறண்ட சருமமா அல்லது எண்ணெய்ப் பசை சருமமா என்பதைக் கண்டறிய வேண்டும். வுட் லேம்ப் அதைக் கண்டுபிடித்து விடும். எண்ணெய் சருமமாக இருந்தால் மஞ்சள் புள்ளிகள் தெரியும். வறண்ட சருமம் எனில் வெள்ளைப் புள்ளிகள் தெரியும். அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
முகத்தின் திடீர் பளபளப்புக்கு "ஆக்ஸிஜன் ப்ளீச்":
இந்த ப்ளீச்சில் ஆக்ஸிஜன் கலந்து இருப்பதால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வராது. முகத்தில் உள்ள பூனை முடிகள் கூட சரும நிறத்துக்கு மாறிவிடுவது இதன் கூடுதல் சிறப்பு.
கோல்டு பேஷியல்:
மணப்பெண்களால் விரும்பி செய்யப்படும் ப்ளீச் இது. 24 காரட் கோல்டு க்ரீம் என்பதால் மிக விரைவில் முகம் பொலிவடையும். ஜெல் மாஸ்க் போடுவதால் முகம் வழவழப்பாக மாறும்.
கழுத்து மசாஜ்:
இயல்பிலேயே அழகான முகம் என்றாலும் மன அழுத்தத்தால் முகம் சுருங்கிக் கொள்ளும். சிலருக்கு கழுத்தில் துர்நீர் சேர்ந்து கொண்டாலும் மன அழுத்தம் அதிகரித்து தலைவலி உண்டாகும்.
பின் கழுத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளை மசாஜ் செய்வதால் டென்சன் குறைந்து ரிலாக்ஸ் ஆகலாம்.
வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சைகள்:
1 டீஸ்பூன் ஜெலட்டினை 1/2 கப் வெந்நீரில் கரைத்து அதில் கை, கால் நகங்களை ஊற வைத்தால் நகங்கள் உடையாது, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
1 டேபிள்ஸ்பூன் கேரட் சாறில் 2 டீஸ்பூன் பாதாம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பயறு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்த விழுதை முகம், கை, கால் என வெயில்படும் இடங்களில் தடவி வந்தால் வெயிலால் கருத்த சருமம் நிறம் மாறும்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் கலந்து லேசாகச் சூடுபடுத்தி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிராமல் செழிப்பாக வளரும்.