என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உதடுகள் சிவக்கணுமா


கறுப்பான உதடுகளாக இருக்கின்றன என்று உணருபவரா! கவலையை விடுங்க,
இரவில் தூங்க போகும் முன் மறக்காமல் கிளிசரின் எலுமிச்சைச்சாறு இரண்டும் சம அளவில் கலந்து உதட்டில் பூசிவிட்டு படுங்கள்.காலையில் எழும்பினதும் கழுவி விடுங்கள்


காலப்போக்கில் உதடுகளின் கருமை மறைந்து விடும்.

வகைகள்: அழகு
குறிச்சொற்கள்: கவர்ச்சியாக கவர்ச்சியான உதட்டுக்கு லிப் டிப்ஸ் lips tips இதழ்களால் வருட இளமை பெண்களிற்கு உதடு சிவக்க சிவந்து சிவந்த உதடுகள் பெண்களின் அழகுக்கு மற்றவை பொழுதுபோக்கு பெண்களின்அழகுக்குஅழகுகுறிப்பு

முக மலர்ச்சிக்கு

உங்கள் முகம் எப்பவும் fresh ஆக இருக்க

சிறிதளவு உங்கள் முகத்திற்கு போதுமானளவு சந்தனப்பவுடர் அல்லது வெண்சந்தணம் எடுத்து அதில் மூன்று துளி கிளிசரின்,போதுமானளவு தேன் மற்றும் போதுமானளவு பால் மூன்றையும் சேர்த்து பசை தன்மையானதும் முகத்தில் பூசிவிட்டு(apply) 30 நிமிடம் கழித்து கழுவினால்(face wash) முகம் சோர்வடையாது மலர்ச்சியாக(fress) இருக்கும்.(முகத்துடன் சேர்த்து கழுத்திற்கும் பூசலாம்)



ஏதேனும் நிகழ்வுகளிற்கு போகும் போது இப்படி செய்திட்டு போனால் நீங்கள் வரும் வரைக்கும் உங்கள் முகம் போகும் போது இருந்த மாதிரியே இருக்கும்.அதைவிட கறுப்பாக இருக்கின்றேன் என்று உணர்பவர்களும் இதை பயன்படுத்தி பயன்பெறலாம்.முயற்சித்து பாருங்கள்.முயற்சி பலனளிக்கும்.வாழ்த்துக்கள்.

வியர்வை நாற்றம் போக

குளிர்காலம் முடிந்து கோடை காலம்
ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின்
சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும்
ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த
நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை
உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில்
ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில்,
கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

இந்த நீரில்
குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு
குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள்
ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு
ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில்
நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும்
சுத்தமாகி மணம் வீசும்.

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும்
ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு
மேல் கால் வானிக் சிகிச்சையை நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான
மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதம் என்றே வையிட்டனிங் பேஷியல்களைச்
சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை
நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக் கப்படுகின்றவற்றால்
இந்த பேஷி யல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப்,
பெக் என ஒவ்வொரு கட்டத்தி லும் நிறத்தை அதிகரிக்கச் செய் கிற பொருட்கள்
இதில் உண்டு.
கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓரஞ்சுப் பழங்களைக் கொண்டு
தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை
கறுப் பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.
இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.
அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின்
டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப்
பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.
ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல்,
ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும்.
லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற
உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும்
அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கறுப்பாகக் காட்டும்.
வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிறீம், டார்க்
பிங்க், ஒரேஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை
அணியலாம்.
கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்.
ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும்,
சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை

முகப்பரு மற்றும் பரு தழும்பு நீங்க:

புதினா இலையை அலசி ,நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும்.அரை மணிநேரத்திற்க்கு பிறகுகழுகிவிடவும்.

பரு தழும்பு மாற 1டீஸ்பூன் முள்ளங்கிஅரைத்து, 1 டீஸ்பூன் மோரில் கலக்கி முகத்தில் தேய்த்து 1 மணிநேரத்தில் கழுகிவிடவும்.

4,5 பாதம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அதில் 2 ஸ்பூன் பால்,1 ஸ்பூன் ஆரஞ்ச்சாறு ,1 ஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும் அரைமணிநேரத்திற்குப் பிறகு கழுகிவிடவும்.முகத்தின் தோல் பொலிவு பெரும்

பழுத்த தக்காளி ஒன்றும்,மூன்று சொட்டு ஆரஞ்சாறும் சேர்த்து முகத்திலும்,கழுத்திலும் தேய்த்து 20 நிமிடத்திற்குப் பிறகு கழுகி விடவும்.

இதனை போல் அடிக்கடி செய்தால் முகம் பளிச் பளிச் தான்

முகம் பளபளப்புடன் திகழ....

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி
இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில
வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி
நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.


ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றhக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி
சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின்
மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில்
இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி* எலுமிச்சை *சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.


வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்