என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆரோக்கியத்தின் கண்ணாடி சருமம்


அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். அறிவையும்அழகையும்தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள். அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்? மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான். ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது. சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை.

சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன. நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் “வாட்டர் புரூப்” போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது. சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது “எபிடெர்மிஸ்”. உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும்.

ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன. நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார். சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும். சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன.

(அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க) முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும். சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது.

வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம். ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து “சன் பாத்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது. முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும்.

அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும். சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.

தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?

குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது.

சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்


வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்? ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர். எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள். WD அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம். இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

பயத்தம் பருப்பில் பளபளப்பு


பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்… “அஹா…. இது என் முகம் தானா?” என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள். தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.

இதனுடன். கஸ்தூரி மஞ்சள் தூள் 1 சிட்டிகை கலந்து கொள்ளலாம். குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த பேக் போட்டு. பத்து நிமிடம் கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது அசந்து போவீர்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை இலை முகத்தை “ப்ளீச்” ஆக்கும். துளசி, தோலை மிருதுவாக்கும். ரோஜா மொட்டு “பளபளப்பு” தரும். வேப்பிலை பருக்களை ஒழிக்கும்.

பூலான்கிழங்கு வாசனையை வழங்கும் கஸ்தூரி மஞ்சள் மினுமினுப்பு தரும். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்…. பயத்தம் பருப்பு அரை கிலோ, சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன் ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம்.

இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும். முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த “கருப்புக் கவலைகளை” போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற. “ப்ளீச்” பவுடர்… பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம். பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்… இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள். “எங்கே போச்சு கருமை?” என்று திகைத்து நிற்பீர்கள். தலையில் மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் முழுக்கவேகூட சருமம் வறண்டு வருத்தம் வாட்டியெடுக்கும் அவர்களின் வருத்தத்தை விரட்டவே இந்த டிப்ஸ்… பயத்தம் பருப்பைத் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து டீஸ்பூன் நல்லெண்ணையைச் சிறிது சூடாக்கி, அதில் தேவையான அளவு பவுடரைக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். குளிக்கும் போது தலை முதல் கால் வரை பூசி, சூடான நீரினால் அலம்புங்கள்.

இந்தப் பயத்தம் குளியலை வாரம் இருமுறை மேற்கொண்டாலே, மேனி புத்துணர்ச்சியுடன் பளபளக்கும். பலருக்கும் முகம் பளிச்சென்று இருக்கும். ஆனால் கை, கால்களில் மட்டும் சுருக்கம் தோன்றி, முதிய தோற்றம் காட்டும். இந்தச் சுருக்கங்களை துரத்தியடிக்க ஒரு பேஸ்ட்….. ஒரு டீஸ்பூன் பயத்தம் மாவுடன் 5 துளி எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்டாக்கி, சுருக்கம் விழுந்த பகுதிகளில் இந்த பேஸ்ட்டைச் சில நிமிடங்கள் தடவிக்கொண்டே இருந்துவிட்டு, சூடான நீரில் கழுவி விடுங்கள். ஊற விடக் கூடாது. விரைவிலேயே சுருக்கங்கள் மறைந்து. தோல் மிருதுவாகும்.

முக அழகைக் கெடுக்கும் பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்றவற்றைப் போக்கி, முகத்தைக் கண்ணாடி போல மினுமினுக்க செய்கிற ஸ்பெஷல் பவுடர் இது…. பயத்தம் மாவு 1 டீஸ்பூன், வெட்டிவேர் பவுடர் அரை டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன். இவற்றைக் கலந்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள், தேமல், தழும்பு பகுதிகளின் மீது இந்தப் பேஸ்ட்டை லேசாக அழுத்திப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து அலச தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்! பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லி மாளாது.

வெடிப்புகளால் மனம் வெடிப்பவர்களுக்கான மகிழ்ச்சி பேஸ்ட் இது! தே. எண்ணெய் 1 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பசுநெய் 4 துளி, மஞ்சள்தூள் 2 சிட்டிகை. இவற்றுடன் 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து கொள்ளுங்கள். தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் ஐந்து நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். விரைவிலேயே வெடிப்பு, கருமை நீங்கி பாதம் மெத்தென்று ஆகிவிடும்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்

அழகான பாதங்கள் வேண்டுமா ?

பாதங்களை அழகாக்குவதற்கு பெடிக்யூர் செய்து கொள்கிறோம். இதை நல்ல தரமான அழகு நிலையத்தில் செய்து கொள்வதற்கு அதிகமாக செலவாகும். இப்படி செய்து கொண்டாலும், அதை அனேகம் பேர் விரும்புவதில்லை. காரணம், அது மருத்துவ முறையில் இயந்திரத்தனமாக செய்யப்படுகிறது.

இதோ, வீட்டிலிருந்தபடியே இதை செய்து கொள்வதற்கு சில ஆலோசனைகள்….

* கால் நகங்களில் ஏற்கனவே இருக்கும் பாலீஷ்களை முதலில் நீக்க வேண்டாம். இதற்கு தேவையான ஸ்க்ரப்பர், கிரீம், துவாலை, காலுறை, செருப்புகள் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

* நகத்தை வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. கால் இன்ச் அளவிற்கு இடைவெளி விட்டே வெட்ட வேண்டும். நகத்தை வெட்ட மற்றும் நகத்தின் அழுக்குகளை எடுக்க என்று, இரண்டுவிதமாக செயல்படும் நகவெட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

* பிறகு, மிதமான சுடுநீரில் சிறிதளவு ஷாம்பூ கலந்து, அதில் நம்முடைய கால்களை வைத்து ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது அல்லது நமக்கு பிடித்தமான இசையை ரசிப்பது என்று அதை அனுபவிக்கலாம்.

* கால்களுக்கான நல்ல தரமான ஸ்க்ரப்பர், பூமிஸ் கல், அதற்கான பிரஷ் போன்றவற்றை கொண்டு நன்றாக கால்களை தேய்த்துவிட வேண்டும். இதன் மூலம், கால்களில் படிந்துள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.

* கால்களை இவ்வாறு தேய்க்கும் போது சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கான கிரீம்கள் அல்லது பவுடரை தடவி தேய்க்கலாம். இப்படி செய்வதால், வலி குறைவதுடன் இறந்த செல்களும் இதனுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.

* இந்த செய்முறை முடிந்தவுடன், கால்விரல்களின் கணுப்பகுதியில் உள்ள தேவையில்லாத சதையினை, அதற்கென உள்ள பிரத்யேக கருவியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* இது முடிந்தவுடன், அடுத்தது முக்கியமாக செய்ய வேண்டியது கால்கள் மற்றும் நகங்களுக்கு தகுந்த மாய்ஸ்டரைசர் மற்றும் நக கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

* முகத்திற்கு தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மட்டும் போதாது. நம்முடைய கால்களையும் நாம் பேண வேண்டும். கால்விரல்களுக்கு நல்ல தரமான நகப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.

* பெடிக்யூரை மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து கொள்வது நம்முடைய பாதங்களை அழகாக, மென்மையாக வைக்கும்.

* நம்முடைய தோழிகளை அழைத்து ஒருநாளில் அனைவரும் சேர்ந்து பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

காலையில் உற்சாகம்... ஏன்?

ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்துவிடும். குறிப்பாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள்.

இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்... என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் அனை வருமே சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத் தின் காரணமாக கொஞ்சம் மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அதேபோல், மதியம் கொழுப்பு நிறைந்த பிரியாணி அல்லது தயிரோ அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங் களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.

நாம் உண்ணும் உணவு நம் மனநிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உணவு ஜீரணமாகும்போது பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மன நிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு `நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்' என்று பெயர். நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை. உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். தக்காளி, சுரைக்காய், அன்னாசிப்பழம், சீதாப்பழம், முந்திரிப் பருப்பு, எறா, முட்டை போன்ற உணவுகள் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

இதனால் மூக்கில் தண்ணீர் வடிதல், கண்ணில் நீர் வடிதல், உதடுகள் எரிச்சல், மூச்சு தடைப்படுதல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பாதிப்பால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு சோர்வடைவார்கள். ஒவ்வாமையில் சிலருக்கு தோலில் நமைச்சல் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும். சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு.

அதே காபி சூடு குறைந்தால் ருசி இருக்காது. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும். சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.

சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்!

சக்தி மிக்க சீம்பால்

குழந்தை பிறந்ததும் `சீம்பால்' என்று அழைக்கப்படும் முதல் தாய்ப்பாலை அதற்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது ஏன் தெரியுமா? பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அதனால், எளிதில் அந்த குழந்தையை எந்த நோயும். தாக்காது.இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும்போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது.

இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்களே நிரூபித்து இருக்கிறார்கள். அதனால், எந்த தாயும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க மறக்க வேண்டாம்.

அழகு குறிப்புகள்

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே.

பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.

பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது.

ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும்.

பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும்.

ஆனால், ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்! பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கும் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது.

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம்.

ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. பால், மாட்டின் ரத்தம் இல்லை.

அது தாவரங்களின் உயிர்ச்சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது

பிரம்மச்சார்யமா? தாம்பத்தியமா? - எது ஆரோக்கியப் பாதை

உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது.

சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும்.

உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது.

மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.

எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது.

இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன. பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.

காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும்.

மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை.

திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார்.

இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம்.

மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக்கிறது.

காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும். அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது.

இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன. ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும்.

இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.

பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது; அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும்.

உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும்.

சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.

அழகான கன்னங்கள் வேண்டுமா?

அழகான கன்னங்கள் வேண்டுமா? உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரிய குறையே இல்லை.


ஆரோக்கிய உணவு முறை இருந்தால் மிக எளிதாக இதை சரிசெய்ய முடியும். புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும்.


பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். வேண்டாத கவலையை விட்டு விடுங்கள். இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி விடும்