என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

காலணிகள் வாங்கும் முன்



நாம் உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தும் கவனத்தை, செருப்பைத் தேர்ந்தெடுப்பதில் காட்டுவதில்லை.
காலத்துக் கேற்ற உடைகள் மாதிரி காலணிகளும் உள்ளன.

செருப்பு வாங்கும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

மற்றவர்களின் காலணியைப் பார்த்து அது போல வாங்காதீர்கள்.

உங்கள் பாத அமைப்புக்கு ஏற்ப வாங்கவும். தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு எல்லா விதமான செருப்பும் எடுப்பாக இருக்கும். அதே நேரம் அகலமான பாதங்களை உடையவருக்கு, மிகப் பெரிதாக பெருவிரல் எலும்பு உள்ளவர்களுக்கு மூடிய காலணிகள் நல்லது.

சிலருக்கு தோல் காலணிகளால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் ஜோத்பூரி அல்லது கோலாபூரி செருப்புகள் அணியலாம்.
செருப்புகளின் எடை அதிகமாக இருக்கக் கூடாது.

தரமான செருப்புகளையே அணியுங்கள்.

வீடு மற்றும் வெளியே அணிந்து செல்லும் காலணிகளை தனித் தனியே வைக்கவும்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டிய இடத்துக்குப் போகும் போது அதிக உயரம் இல்லாத செருப்பை அணியவும்.

இதே போல இண்டர்வியூக்கு செல்லும் போது ஸ்ட்ராப் உள்ள செருப்புகளையே அணியவும்.

குளிர் காலத்தில் பாதத்தை ஒட்டிய படி இருக்கும் செருப்புகளையும், மழைக் காலத்தில் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணியவும். கோடைக் காலத்தில் காற்றோட்டமான செருப்பு அணியவும்.

வயதானவர்களுக்கு மென்மையான செருப்புகளை வாங்கிக் கொடுங்கள்.

ஃபேஷன் என்ற பெயரில் பார்க்கும் காலணிகளை யெல்லாம் வாங்க வேண்டாம். வாங்கும் செருப்பு எல்லா உடைக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும்.

மழைக் காலத்தில் செருப்பை வெளியில் உலர வைத்து பின்பு, பிளாஸ்டிக் சுவரில் அல்லது பிளாஸ்டிக் தாளில் மூடி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.

செருப்புகளை வாங்கினால் மட்டும் போதாது, அதை நெடு நாள் வரை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
தோல் மற்றும் துணி வகைகளில் ஆன செருப்புகள் நீண்ட நாள் உழைக்காது.

தோலில் ஆன செருப்புகள் மற்றும் சேண்டல் வகை செருப்புகளுக்கு அடிக்கடி பாலிஷ் போடவும். இதனால் இதன் அழகு கூடுவதோடு அதன் ஆயுளும் கூடுகிறது.

காலணிகளை அடுக்கி வைக்க கடை வீதியில் வித விதமான ஷூ ரேக் மற்றும் ஷூ பைகள் கிடைக்கின்றன.
பட்டு, வெல்வெட்டு போன்ற செருப்புகளை பழைய பருத்தித் துணியால் சுற்றி வைக்கலாம். நாடா உள்ள, சரிகை மற்றும் கண்ணாடி வைத்த செருப்புகளையும் இப்படி வைக்கலாம்.

வாங்கிய செருப்புகளை அதிக நாள் பயன்படுத்தாமல் வைக்காதீர். இற்றுப் போகும். அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் தான் அதிக விலை கொடுத்து செருப்புகளை வாங்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

நகைகள் பளபளக்க!



தங்கம் அழகை உயர்த்துவது மட்டுமல்ல...

உங்கள் வாழ்க்கைத் தரத்திற்கான ஒரு அடையாளமாகவும் மாறிவிட்டது.
தங்கத்தை விரும்பாத மங்கையர் யாருமில்லை. தங்க நகைகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். உங்கள் நகைகளைப் பாதுகாக்க இதோ நாங்கள் தரும் சில டிப்ஸ்!
நகைகளை அணியும் முன்பே மேக்-அப் செய்து கொள்ளவும். ஏனெனில், பவுடர் மற்றும் ரூஜின் சிறு துளி கூட தங்கத்தின் பளபளப்பைக் குறைத்து விடும்.
ஸ்ப்ரே செண்ட், நகப் பூச்சு படாமல் நகைகளை பார்த்துக் கொள்ளவும்.
முத்துக்கள் மீது நகப் பூச்சு பட்டால் முகத்தின் மேல் பகுதி சிதைந்து விடும்.

எப்படி சுத்தம் செய்வது?
மிருதுவான பருத்தித் துணியையோ அல்லது கடைகளில் விற்கும் மினரல் வாட்டரையோ பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை சோடா பை கார்பனேட் போட்டு அதில் தங்க நகைகளைப் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து மென்மையான துணியால் துடைக்கவும். நகை பளபளப்பாகும்.
தங்கம் மற்றும் கலா ரசனையான பொருட்களைக் கூட மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.
செய்யக்கூடாதது ...
நகைகளை சிறிய டப்பாக்களில் போட்டு வைக்காதீர்.
பிற உலோக நகைகளை தங்கம் மற்றும் வெள்ளி நகையோடு சேர்த்து வைக்காதீர்.
சொக்கத் தங்க நகைகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட, நகையை கொதிக்கும் நீரில் போடாதீர். நல்ல பருத்தி துணிக் கொண்டு சுத்தம் செய்யவும்.
நகைகளை சுத்தம் செய்ய சோப் - சர்ஃப் பவுடர் மற்றும் டூத்பேஸ்டை உபயோகிக்காதீர், குளோரின் தங்கத்தின் மேல் பகுதியை பாதிக்கும்.
குறிப்பு :
நகைகளை வெல்வெட் மற்றும் சாட்டின் லைனிங் செய்யப்பட்ட டப்பாக்களிலேயே வைக்கவும்.
தனித்தனி டப்பாக்களில் அவற்றை வைப்பது சிறந்தது.
ஒவ்வொரு நகையையும் பயன் படுத்துவதற்கு முன்பும் பின்பும் தூய்மையான துணியால் துடைக்க மறக்காதீர்.
நகைகளை பீரோவில் வைப்பதற்கு முன்பு, ட்ரேசிங் பேப்பரால் சுற்றி பிறகு துணிகளால் சுற்றி வைக்கவும், பிங்க் நிற ட்ரேசிங் பேப்பர், அலமாரியின் துருவில் இருந்து நகையைப் பாதுகாக்கும்.

அழகுக்கலை கற்க...



பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க மிக எளிய வழி...
அழகுக் கலை பயில விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக்கலை பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறுவதுதான் புத்திசாலித்தனம். அதுவும் அழகுக் கலையில் பல ஆண்டு அனுபவமுள்ளவர்களிடம் பயின்றால் முழுமையான பயிற்சியை மிக விரைவில் பெற்று சிறந்து விளங்க முடியும்.
அழகுக்கலையை பயில்வதற்கு கல்வித்தகுதி அவசியமே இல்லை. சிறிது அழகுணர்ச்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். அழகுக்கலை நிபுணர்கள் அத்தனை வகையான டெக்னிக்கையும் மிக சிம்பிளாகச் சொல்லித் தருகிறார்கள்.
பியூட்டி பார்லர் திறக்கக் கடன் வசதி கூட பெற்றுத் தரப்படுகிறது. இப்போதெல்லாம் நிறைய பெண்கள் வேலைக்குப் போக தொடங்கி இருப்பதால், அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரம் இருப்பதில்லை. அதனால்தான் சமீப காலமாக அவர்கள் அழகு நிலையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிடும். அப்போது அழகு நிலையங்களும், அழகுக் கலை நிபுணர்களும் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.
ஆகவே நீங்கள் ஒரு வேளை வீட்டில் முடங்கி இருந்தால் இந்த சுயதொழிலை கற்று முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.



'ஹேர் டை' உபயோகிக்க...



Hair Dye - Tips - Child Care Tips and Informations in Tamil
"ஹேர் டை" எல்லாருக்குமே சரிபட்டு வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். "ஹேர் டை"களில் கூட கெமிக்கல் கலக்கிறார்களாமே? "ஹேர் டை" உபயோகிக்கலாமா, கூடாதா?

"கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும், காப்பிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை.

இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான "ஹேர் டை"கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் "ஹேர் டை"களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம், எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும்.

இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த ப்ராண்டைத் தவிர்த்து வேறு ப்ராண்ட் மாற்ற வேண்டியதுதான். அலர்ஜி மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஹெர்பல் "ஹேர்டை" கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன.

அதற்காக "ஹேர் டை" உபயோகிக்கவே கூடாது என்றில்லை. ஆனால் அளவாக உபயோகிக்க வேண்டும். "ஹேர் டை" போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு தள்ளிப் போடலாம். எந்த ஒரு "ஹேர் டை" வாங்கினாலும் அதிலிருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா என்று பார்த்து ஒரு பிரச்னையும் இல்லையெனில் உபயோகிக்கலாம்.

நகைகள் வாங்க போறீங்களா....



To buy jewels... - Child Care Tips and Informations in Tamil
நகைகள் வாங்கும்போதும், வாங்கிய பின்னும் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் இதோ:
* நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்த பின் கடை படி ஏறுங்கள்.
* உங்கள் "பட்ஜெட்" என்ன என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும்.
* "ஹால் மார்க்" முத்திரை போட்ட நகைகளையே வாங்க வேண்டும்.
* பழைய நகைகளில் கல் வைத்த நகையைப் போட்டு விட்டு புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.
* செய்கூலி எவ்வளவு சதவீதம், சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* சரியான ரசிது கொடுக்கப்படுகிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
* அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா? அல்லது முதலீடு செய்யும் முயற்சியா? முதலீடு என்றால், தங்கக் காசாக வாங்கி வைத்துக் கொள்வது தான் சிறந்தது.
* நகை வாங்கக் கிளம்பும் முன், தங்கத்தின், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும். பிறகு வருந்த வேண்டாம்.
* கே.டி.எம்., நகைகள் என்பன தனியாகத் தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ரசிதில் இது குறித்த தகவல் எழுதப்பட வேண்டும்.
* நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து வைத்து விடுங்கள்.
* நகைகளை "இன்சூர்" செய்வது மிக மிக முக்கியம். இதெல்லாம் சற்று சிரமமான வேலைகள் தான். ஆனாலும் விடாதீர்கள். செய்து வைத்து விடுங்கள். ஆபத்துக்கு உதவும்.
* வாங்கிய நகைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். நகைகளை அணிவதற்கு முன்னதாகவே, பவுண்டேஷனோ, பவுடரோ போட்டுக் கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப் பூசிக் கொண்டால், நகைகள் பொலிவிழந்து விடும்.
* நகைகளைக் கழற்றி பத்திரப்படுத்தும்போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் டப்பாக்களில் போட்டு வைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.
* ஒவ்வொரு நகையையும் தனித்தனி டப்பாக்களில் போட்டு வைத்தால் புத்தம் புதிதாக ஜொலிக்கும்.
* நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். "மைல்டு ஷாம்பு"வில், மென்மையான பிரஷ்ஷைத் தோய்த்து பத்திரமாக நகைகளைத் தேய்த்துக் கழுவினால் நகைகள் "பளிச்" சென்றிருக்கும்.

வெற்றி சிந்தனைகள்



Thoughts for victory - Child Care Tips and Informations in Tamil
காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்!
காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீங்கள் உணர வேண்டும்.
"எனக்கு நேரமே சரியில்லை!" என்று புலம்புகின்ற மனிதர்கள் சிலர். "என்றைக்கு நல்ல காலம் பிறக்குமோ!" என்று பெருமூச்சுவிடுபவர் சிலர்.
"நேரமும் காலமும் வந்து ஒண்ணா சேர்ந்திடுச்சிண்ணா நடக்கிறதெல்லாம் நல்லபடியாக நடந்திடும்" என்று நல்ல நேரத்துக்காக சோதிடர்களிடம் நாள் நட்சத்திரம் பார்க்கச் செல்லுபவர்கள் சிலர்.
இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்தான் "நேரம் - காலம் - Time"
இவ்வாறு காலத்தின் பெருமை பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டாலும் நம்மில் பலர் காலத்துக்கு உரிய மதிப்பளிக்காமைக்குக் காரணம் காலத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமைதான்.
"என்ன செய்வதென்றே தெரியவில்லை"
"சே! ரொம்ப சலிப்பாக இருக்கிறது"
"இப்ப போனா போகட்டும்; பிறகு பார்த்துக்கலாம்!"
"என்றைக்காவது ஒருநாள் வராமலா போய்விடும்!"
இப்படியெல்லாம் பேசி, காலத்தை வீணடிப்பவர்களும் உண்டு. நாமும் அவர்களை போல் இல்லாமல் காலம் பொன்போன்றது என்று நினைத்து காலத்தை கவனமாக கையாளுவோம். அவ்வாறு காலத்தைக் கவனமாகக் கையாள வேண்டுமானால் அதற்கான 10 கட்டளைகள்.
1. வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டொழியுங்கள்.
2. சோம்பேறிகள், சுகவாசிகள், வேறு வேலையில்லாதவர்களோடு பழகாதீர்கள்.
3. வாழ்க்கைக்குப் பயன்தராத புத்தகங்களைப் படிக்காதீர்கள்.
4. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த நிகழ்ச்சிகளை மட்டும் கேளுங்கள் - பாருங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் - நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.
6. செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடியுங்கள்.
7. எந்த வேலையையும் இதற்குள் முடிப்பேன் என்று ஒரு காலக்கெடு வைத்து அதற்குள் முடிக்க முயற்சியுங்கள்.
8. நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்? யாரைச் சந்திக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இன்றைக்கே குறித்து வையுங்கள்.
9. உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
10. நல்ல ஓய்வு எடுங்கள். போதிய உறக்கம் தேவை. தியானம் செய்யுங்கள்.

பிடிக்குமா?



Do you like - Child Care Tips and Informations in Tamil
பிடித்ததைச் செய்யாவிட்டால் வாழ்க்கை "டல்"தான்!
நமக்குப் பிடித்த கலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால், வாழ்க்கை இருண்டு போகும். இது உண்மை. அன்றாட வாழ்க்கையில் 99 சதவீதம் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே செலவிடும் போக்கு நம்மிடம் உள்ளது. நமக்கென்று ஒரு நிமிடமாவது செலவழிக்கும் போது தான் நம்மை நாம் உணரத் துவங்குவோம். 99 சதவீத நேரத்தைக் கடமையாற்றச் செலவிடுவதைச் சற்றே தளர்த்தி, கடமைகளை நேரமறிந்து செய்து, நமக்கென்று நேரத்தை ஒதுக்கி தினமும் சந்தோஷம் கண்டால், வாழ்க்கை இனிக்கும்.
மாதத்திற்கு ஒரு நாள் "ரொட்டீனுக்கு" லீவு!
மாதத்திற்கு ஒரு நாள் ரொட்டீன் வாழ்க்கைக்கு "டாட்டா" சொல்லி உங்கள் குடும்பத்தினருடன் வெளியில் சென்று விடுங்கள். சினிமா, டிராமா என்று பார்க்கச் சென்றால், அவற்றின் கதைக்குள் "புகுந்து கொண்டு மனம் வெளியில்" வர மறுக்கும். இப்படி நேரத்தை வீணடிக்காமல், பார்க், பீச், கோயில், உங்களுடன் மனம் விட்டுப் பழகும் உறவினர் வீடு என்று செல்லலாம்.
இவை எதுவுமே போரடித்தால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுங்கள். உங்களை அறியாமல் புத்துணர்வு கிடைக்கும்.
பாட்டு பாட பிடிக்குமா? அரை மணி நேரம் ஒதுக்குங்கள்!
சிலருக்கு வாய் விட்டுச் சத்தமாய் பாடுவது பிடிக்கும். வேலை செய்தபடியே பாடுவது கை வந்த கலையாக இருக்கும். ஆனால், வேலையைக் "கோட்டை விட்டு" பாடுவது ஆபத்து. இதிலும் திறமையுடன், அதிலும் ஜமாய்க்கலாம் என்றால் பிரச்னை இல்லை.
பாட்டு கேட்க மட்டும் பிடிக்கும் என்று சொல்பவர்கள், ரேடியோவில் பாட்டு கேளுங்கள். "டிவி" வேண்டாம்.
இனிப்பு பலகாரம் செய்யுங்க!
சிலருக்கு சமைப்பது ரொம்பவே பிடிக்கும். மனசு பாரமாக இருந்தால், அன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்து சாப்பிடுங்க. அதுவும் செய்யப் பிடிக்கவில்லை எனில், ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுங்க. அவசரமாய் உள்ளே தள்ளாமல் சிறிது எடுத்து நாக்கின் நுனியில் வைத்து அதன் முழு ருசியையும் அனுபவித்துச் சாப்பிடும்போது மனசு பாரமும் ஐஸ்கிரீம் போல் கரைந்து விடும்.
ஆரஞ்சு கலர் உடை உடுத்திக் கொண்டால்...
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்? எதுவாக இருந்தாலும் ஆரஞ்சு நிற உடையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் தோல் நிறம் எதுவாக இருந்தாலும் போரடிக்கும் போது ஆரஞ்சு நிற உடையை உடுத்திக் கொண்டால், உங்களை அறியாமல் மனம் துள்ளத் துவங்கும்.
உடற்பயிற்சி செய்யுங்க!
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுதும் சுறுசுறுப்பாகவே இருப்போம்.
தூங்கி வழியும் பேர்வழிகளுக்கு இது கை கண்ட மருந்து. செய்யத் துவங்கும் வரை தான் சோம்பல்; செய்யத் துவங்கி விட்டால், மனமும், உடலும் புத்துணர்வு பெறும்.
குழந்தை பெற்றவர்கள் அவர்களுடன் கொஞ்சி மகிழலாம்!
திருமணமாகிக் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் முழுதும் அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்து, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யலாம். இதில் கிடைக்கும் சந்தோஷம் கடலைப் போன்றது.
இது போன்று, உங்களுக்கென பல விஷயங்களில் அக்கறை செலுத்தினால் சோர்வுக்கும், சோகத்துக்கும் "டாட்டா" சொல்வீர்கள்!

தூங்கும் முறை சரிதானா?



Sleep - Child Care Tips and Informations in Tamil
எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா? சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில் கவனியுங்கள்.
அமெரிக்கன் அகடமி ஆப் ஸ்லீப் ரிசர்ச் அமைப்பு (American Academy of Sleep Medicine - AASM), சில "டிப்ஸ்"களை தந்துள்ளது, இதோ:
* சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.
* அதற்காக "டிவி" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.
* படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், பத்து நிமிடம் வரை புத்தகம் படிக்கலாம். இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
* கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.
* தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.
* இரவில் காபி (Coffee), டீ (Tea), சாக்லெட் (Chocolate), கோலா (Cola) சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.
* படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர "குட்டித்" தூக்கம் மிக நல்லது

வீட்டிலிருந்தே சம்பாதிக்க



Earn mony to many way by home - Child Care Tips and Informations in Tamil
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?
அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா?
சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும். சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.
வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.
பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்- 1, தேங்காய் எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்.
பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும். (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன் றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.
டெடிபியர் செய்யலாமா?
முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால் களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும். உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள்.
தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.
முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.
கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது. உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.
கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை.
இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

இல்லத்தை அழகுபடுத்த...



Home Decoration - Child Care Tips and Informations in Tamil
சிறிய ப்ளாட்டில் வசிப்பவரா நீங்கள்? அதையே அழகாக வைத்துக் கொள்ளப் பிரியப்படுகிறீர்களா? அதற்கு கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருக்கவேண்டும்.
வீட்டின் நுழைவு வாயிலின் வலது மூலையில், டெரகோட்டா உருளியிலோ அல்லது வெண்கலத்தில் சற்றே அகன்ற ஏந்தலான பாத்திரத்திலோ, தண்ணீர் நிரப்பி, சிறு பூக்களை அடர்த்தியாய் பரப்பி விடவும். இந்த மலர் அலங்காரம் பார்க்கும் போதே புத்துணர்வூட்டும் மனதிற்கு சக்தியையும் அளிக்கும்.
தரையில் வட்ட வடிவ கார்பெட் போடுவதால் சிறு ஹாலின் அழகு பரிணமிக்கும்.
சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம்.
உங்கள் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். இரண்டு பெரிய விசிறிகளை அரை வட்ட வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.
ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.
டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது.
சமையலறை அலமாரியில் ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி தேவையான சாமான்களை நிரப்புங்கள்.
மிக்சி க்ரைண்டருக்கு மேடை மூலையில் இடம் கொடுங்கள். க்ரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளின் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.
இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படி தலையணை போர்வைகளை அதில் ஒளிக்கலாம்.
சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த தேக்குக்கதவோடு பூஜைக்கான இடம் அமைக்கலாம்.