என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

தேனின் மகத்துவம்

வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .

டோநர் (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

ப்ளீச் (Bleach)

தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
தேடுதல் அப்புகுட்டி

மின்னும் அழகை பெற

மின்னும் அழகை பெற

""டயட்''
என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக்
கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலி
விழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான்
''மேக்அப்'' செய்தா லும் பயனில்லை. இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப்
பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின் றன. இருக்கும் அரைகுறை அறிவை
வைத்துக் கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் உடலில் பூசி பின்பு
அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர்.

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந் தது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த
அழகுக் கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால்,
அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்
களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு
மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக
முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே.
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்
பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும்
''ஸ்க்ரப்'' செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக்
கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள்,
பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது ''ப்ரூட் பெக்'' எடுத்துக்கொண்டு
''பேஷியல்'' செய்துகொள்வது அவசி யம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச்
சத்துக்கள் மீண்டும் பெறப் படுகின்றன..

தற்பொழுது வேலை பார்ப்பவர் களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்
பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும்.
இதற்கென்றே ''நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பெக்'' அறிமுகப்படுத்
தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப் படும்
சருமத்துக்குப் புத்துணர்ச் சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக் கிறது..



கூலிங் ஐ மஸாஜ்: .

இரவு, பகல் பாராமல் கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு
இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட ''ஜெல்
மாஸ்''கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை
தரப்படுகிறது..


மைக்ரோ டெர்மா சிகிச்சை:.

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி
ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயி லில் அதிகம் சுற்றி,
வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளை ஞர்கள்
இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.
ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்:.

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளை யம் தோன்றி, சருமம் பொலி விழந்து
மங்க லாகக் காணப்படும். அவர்கள் இத்தகைய ஐஸோன் சிகிச்சையைத் தொடர்ந்து
எடுத்துக் கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடை வில் மறையும்.
''சருமம் மினுமினுப்புடன் அழகாய் மிளிர்வதற்கு உடலில் கொஞ்சம் கொழுப்புச்
சத்தும் அவசியம்'' என்கிறார்கள் அழக்ககலை நிபணர்கள்

யோகாவின் முக்கிய பயன்கள்

1.நேராக நிற்க உதவுகிறது

2.இரத்த ஓட்டம் சீராகிறது.

3.உடல் எடை குறைகிறது

4.தொடை,கால்,தண்டுவடம் மற்றும் இடுப்புத்தசைகள் வலுவடைகிறது.

5.மார்பு விரிவடைகிறது

6.கழுத்து,பின்பக்க வலிகள் நீங்கும்.

7.இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது.

8.வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலக்வாக வெளியேறுகிறது.

9.ஜீரண சக்தி அதிகரிக்கிறது. வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

10.உடல் பேலன்ஸ்,பலம் கிடைக்கிறது.

11.மூளை குளிர்ச்சி அடைகிறது.

12.ஊளைச்சதை குறையும்
13.முழங்கால்,மூட்டுவலிகள் பிரச்னைகள் தீரும்.

14.கூன் நிமிர்கிறது.

15.சித்தாசனம்,பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது.

16.சிம்மாசனங்கள் மூலம் வாய்துர்நாற்றம்,திக்குவாய் குணமடைகிறது.

17.தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது.

18.வயிற்றுப்பகுதி உறுப்புக்கள்,சிறுநீரகங்கள்,அட்ரீனல் சுரப்பிகள்,கருப்பை பிதுக்கம்,புராஸ்டேட் சுரப்பி பிரச்னைகள் சீரடையும்.

19.ஹெர்னியாவை தடுக்கிறது. மாதவிலக்கை கட்டுப்படுத்துகிறது.

20.சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.

இப்படி அற்புதமான பயன்களை நமக்கு கொடுக்கும் யோகாசனம் மிகவும் எளிய பயிற்சிகளை உள்ளடக்கியதுதான். அனைவரும் தொடர்ந்து எளிதாக செய்யலாம்

பெண்கள் சிவப்பான அழகைப் பெற

பெண்கள் சிவப்பான அழகைப் பெற கிரீம்களை தேட வேண்டியதில்லை.மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும்.


குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம்?

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது?

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

பெண்களே! குங்குமப்பூவை பயன்படுத்தி அழகு சிலையாக அசத்த "அதிகாலையின்" வாழ்த்துக்கள்.

தேன்

வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .

டோநர் (Toner )
வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

ப்ளீச் (Bleach)
தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)
1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்
மிகவும் `பிசி’யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்’ வேக வாழ்க்கைமுறைக்கு பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். “இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராக பராமரப்பிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொடிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை’ பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது” என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.


நான் படித்தது உங்களுக்கும் பயன் தரும் என்ற நம்பிக்கையில்

அதிகமாக உடற்பயிற்சி செய்வது

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.
நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.


நான் படித்தது உங்களுக்கும் உதவும் என்ற நம்பிக்கையில்

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்பு


இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின்

மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?

எளிய அழகுக் குறிப்புகள்

* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.* தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.

* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.

* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.

* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.

* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?)
ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம்
ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.
வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..

முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.

தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

கூந்தலுக்கு;

தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்

வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.

உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்

இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.

முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்

ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். 22



ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான்

ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.

நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்

சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்

ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..

உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.







கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்

டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.

இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.

உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க...