அழகாக இருக்க!- 12 வழிகள்!
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.
2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.
3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.
4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!
6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!
7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!
8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.
9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.
10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.
11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.
பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது.
இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு.
எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.
ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க.
* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
கவனம்:
* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது

மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது. சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்
புற்றுநோய்
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.
கண்கள்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.
கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
நீரிழிவு
மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
முகப்பரு
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
பாலுணர்வு
பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு
சக்தி மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
ஆரோக்கிய இதயம்
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.
குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-
குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.” – பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. ‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

”பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.
இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.
5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.
பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.
பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.
உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும். வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.
விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.” எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.
”அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !”
மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர்.
* கறுப்பாக இருந்தாலும், “களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது; முகம் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகப்பருவால் அவதிப்படுவதை, கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கும், உடல்வாகிற்கும் பொருத்தமான ஆடை, அலங்காரம் செய்து கொண்டால், அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் கறுப்பானவர்களை, மேலும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. வாரத்தில் ஒரு நாளாவது, சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி, ஊற விட்டு, கழுவி வந்தால் இயற்கை மற்றும் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்கள் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால், அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!

நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.
கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக இருக்கவேண்டும். தாய் உட்கொள்ளும் உணவுகள் கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் முக்கிய பங்காற்றுகிறது.
கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7ம் மாத முடிவிலும் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் திரவ உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். திரவ உணவுகளான பால், இளநீர், பழம், பழச்சாறு ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவையும், இரண்டு மற்றும் மூன்றாம் மாதத்தில் பாலுடன் சில மூலிகைகளான விதாரி சதாவரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தென், நெய்யுடன் கலந்து குடிக்கவேண்டும்.
பிரசவ காலத்தில் இவை முக்கிய பங்காற்றும். மூன்றாம் மாத முடிவில் இருந்தே தாயின் ரத்தம் மூலம் சிசு உணவை ஏற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் எந்த குறைபாடும் இல்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்க கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும்.
இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. பழங்களில் ஜூஸ் செய்து கூட அருந்தலாம். கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும்.
உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதை பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில்
ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த்
திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சை பழத்தின் சத்துக்கள்:
நீர் =85%
கொழுப்பு =7%
மாவுப்பொருள் =10%
புரதம் =0.8%
கால்சியம் =0.03%
பாஸ்பரஸ் =0.02%
இரும்புச்சத்து =0.04%
விட்டமின் A =15%
நியாசின் =0.3%
மருத்துவக் குணங்கள்:
திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.
அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".
திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.
இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.
திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!
ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம்
தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை"டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.
"ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!
உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது
பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது.
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ
உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்:
ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம்,மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
பளிச் முகத்திற்கு:
தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
வெண்மையான பற்கள்:
திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது.
முகச்சுருக்கம் போக்கும்:
திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது.

பித்தவெடிப்பு மறைய:
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு:
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு:
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்:
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
இருமல் சளிக்கு:
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
கட்டிகள் உடைய:
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க:
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற:
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
தும்மல் வராமல் இருக்க:
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய:
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க:
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்:
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக:
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை. மிகச் சிறியதாக இருக்கும். கரு நெல்லி , எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது , உருண்டையாக இருக்கும்.
இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை அனைத்தும் பயன்தருவது.
சத்துக்கள் விவரம்:
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து – 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் – 0,4 மி.கி. கலோரிகள் – 60
வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் ‘சி ‘ அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து –முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.
சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.
இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.
நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.
அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
அமலா கூந்தல்தைலம் கேடத்திற்கு நல்லது .உடலுக்கு குளிர்ச்சி தரும்.
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.
நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற “சயவனபிராச லேகியம்’ அல்லது “நெல்லிக்காய் லேகியம்’ எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
கடைகளில் “நிஷா ஆமலகி சூரணம்’ என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை குணம் ‘கிரீன்
காபி’க்கு(வறுக்காத காபி கொட்டை)
இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் இருக்கும்
‘குளோரோஜினிக் ஆசிட்’ இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும்
கட்டுக்குள்
கொண்டு வர உதவுகிறது என்கிறார்கள்.

இதேபோல ஆப்பிள், செரீப்பழம், பிளம்ஸ் மற்றும் பிறவகை பழங்கள்,
காய்கறிகளில் இந்த
குளோரோஜினிக் ஆசிட் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே நாம்
இவற்றை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு வருவதைத் தவிர்க்கலாம்.

“கிரேக்கத்துல “கடவுளின் பானம்”னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!”. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.
* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.
* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!
* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.
* “ரெஸ்வெரட்ரால் (Resveratrol)” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!
விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.
பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்:
இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது:
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்:
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நினைவுத் திறன் கூடும்:
மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழகு சாதனப்பொருள்:
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

முகத்தை அழகாக்கிக் கொள்வதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். ஆனால் நகங்களை கவனிக்காமலே விட்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல்நிலையை நாம் நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் எனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களது நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதே இதற்கு முதல் உதாரணம். அதுபோல தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு, அதனால் ஏற்படும் பாதிப்பை பழுப்பு நிற நகங்கள் வெளிப்படுத்துகின்றன.
உடல்நிலையில் ஏற்படும் சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும். நகங்களை சுத்தமாகவும், சரியான அளவில் வெட்டி விடுவதும் ஒவ்வொருவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் செயலாகும்.
ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக விரிந்து வளர்வதன் மூலம் அறியலாம். சிலருக்கு நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையே காட்டுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கலாம். எப்போதாவது மனக்கவலை ஏற்படும் போது நகம் கடிப்பது ஒரு சிலர். ஆனால் எப்போதும் நகத்தை தேடித் தேடி கடிப்பது சிலருக்கு பழக்கமாகவே இருக்கிறது. அவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பது கூட நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு நகம் வளர்வதே இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. வேலை செய்யும் போது நகம் தேய்ந்து அதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமலேயேப் போய்விடுகிறது.
மருதாணி இலைகளை அரைத்து வைக்கப்படும் மருதாணி விரல் நகங்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. அதனை முடிந்தால் செய்து வரலாம்.
சிலர் அடிக்கடி நகப்பூச்சை பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. மாதத்தில் ஓரிரு நாட்களாவது நகங்கள் காற்றோட்டத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும்.
மேலும், நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்காக நல்ல மாய்ச்சுரைஸர் க்ரீம்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். இதுபோன்றவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.
கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட சில வித்தியாசங்கள் உண்டு. சிலவை நீள வாக்கில் பிரியும். சிலருக்கு குறுக்காக பிரியும்.
நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நகச்சொத்தை ஏற்பட, நகத்தில் முன்பு எப்போதாவது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம். விரலில் அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது, நகத் தட்டுக்கு அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நகச்சொத்தை தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்கிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.
கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேவையா என்பது பழமொழி. ஆனால் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமையப்பட்டுள்ளதை எண்ணிப்பாருங்கள்.
கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..

தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல் வறட்சியடைகிறது. மேலும், அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல், கடின தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.
* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும். மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி தன்மை குறையும்.
* விளக்கெண்ணெய், கிளிசரின், வினிகர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கூந்தலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
* சிலருக்கு ஷாம்பு போட்டு குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள் தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.
* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

நமது உடல் அழகுடன் மின்ன செய்வதில் கரட் மிகவும் சிறந்த ஒன்று. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது.
* உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டப்பின் ஒரு கரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
* இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
* கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
* தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே!!
விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும். மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணெயும் சரியான ஒன்றாக இருக்கும். சரி, விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!
ஹேர் கண்டிஷனர்
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.
கை மற்றும் நகப் பராமரிப்பு
தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
கிளின்சிங்
விளக்கெண்ணெய் கொண்டும் சருமத்திற்கு கிளின்சிங் செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.
குதிகால் வெடிப்புக்கள்
குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.
சுருக்கங்கள்
சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.
கூந்தல் வளர்ச்சி
பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
மச்சம்
விளக்கெண்ணெயில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.
மாய்ச்சுரைசர்
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
ஸ்ட்ரெட்ச்
மார்க் இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.
முதுமைத் தோற்றம்
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அத்தகையவர்கள், விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.
1) இதன் வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
குணமாகும் வியாதிகள்.
1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க.
"மரு" (Skin Tag) உதிர...
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது
"மரு" [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.
அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால்,
பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.
இது போல் தினமும் பூசி வர,
நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.