என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.

உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம். நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.‌ வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.
மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.

‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.
மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.

‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம்.

நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம். ‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.
கை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்.

கருத்துகள் இல்லை: