இளமைக்கு சில TIPS
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தங்களுக்கு
வயதாகிவிட்டது என்ற எண்ணமே பலருக்கும் மன தைரியத்தை இழக்கச் செய்துவிடும்
ஆனால் வயதாகாமல் இருக்கச் செய்ய எந்த வழியும் இல்லை.
ஆனால் நாம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய
வழி உள்ளது. என்ன எளிய வழியா? இளமையாக இருக்க எளிய வழியா என்று கேள்வி மேல்
கேள்வியாக அடுக்க வேண்டாம்?
நிச்சயமாக எளிய வழிதான். அதாவது எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதும்,
புன்னகையுடனான உங்கள் முகமும் உங்களை பார்ப்பவர்களுக்கு நீங்கள் இளமையாகக்
காட்சியளிப்பீர்கள்
ஒருவரை பார்த்ததும் அவரது முகம்தான் அவரது வயதைக் காட்டுகிறது. எனவே,
ஒருவரைப் பார்த்ததும் சோம்பித் தனமாக காட்சியளித்தால் அவரது இளமை நம் கண்
முன் தெரிவதில்லை. அதே சமயம், ஒரு வயதான முதியவர் நம்மைப் பார்த்ததும் மிக
மகிழ்ச்சியாக ஒரு ஹாய் சொன்னால் கூட அந்த இடத்தில் இருவரிடமும் ஒரு
உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அங்கு வயது மறைந்து விடுகிறது.
இதெல்லாம் வெறும் நடைமுறை என்றாலும், அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டும்
என்றால், அதிகமாக சிரிப்பதனால் முகத்திற்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.
எனவே, முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் தள்ளிப்போடப்படுகின்றன.
பார்ப்பதற்கு இளமையாக தோற்றமளிக்கின்றீர்கள் என்கிறது பல ஆய்வுகள்.
மேலும், புன்னகையுடன் எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து இவருக்கு என்ன
வயதாக இருக்கும் என்று கேட்டால் நிச்சயமாக 5 வயதாவது குறைவாகத்தான் கணிக்க
முடியும் என்பது நமக்கும் தெரிந்த விஷயம்தானே.
சந்தோஷமா இருங்க வாய் விட்டு சிரிங்க