என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

அடிக்கடி தலை வாரினால் முடி உதிருமா?


நம்மில் பலர் அடிக்கடி கண்ணாடியை பார்த்து தலையை வாருவதே வழக்கமாக போய்டுது. அதிலும் ஆண்கள் சிலர் சட்டை பையுக்குள்ளேயே சீப்பை வைத்து அடிக்கடி எடுத்து தலையை வாருவார்கள்........
னால் முடி வளருமா? உதிருமா?

தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெ
ந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்' தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.

விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.

தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கல
ரிங்' செய்வது தான்.

தரமான "ஹேர் டை' வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான "ஹேர் டை'யில், `பாரா பெனிலின் டயாமின்' என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.


மருதாணி தான் `ஹென்னா' என்பது. மருதோன்றிச்செடி இலை
களில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் `ஹென்னா'வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் `ஹென்னா' பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.

அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.

கால்கள் புத்துணர்ச்சியும் அழகும் உண்டாக... இந்த வீடியோவை பாருங்கள்..

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள்


ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்.

தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு தீமையா? நன்மையா?


தயிரில் முக்கியமான வைட்டமின்சத்துகளும், புரதச் சத்துகளும்அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும்தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்


இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

தவிர்க்க வேண்டியவைகள்:
முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படிஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

  • அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

  • உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

  • வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

  • மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.
அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:

இடுப்பில்:

  • பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

  • நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

  • நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

  • நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

  • இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

  • எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

  • தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.
இடுப்பு மற்றும் தொடைக்கு:
  • சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

  • நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

  • நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.
கைகளுக்கு:

  • இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.
கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

  • சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை.
    இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

  • முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

  • முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது... தொடர்ந்து செய்யுங்கள்..

காலை உணவின் அவசியம்



காலையில் நாம் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது.எட்டு முதல் பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு மிக முக்கியமாக "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு இது ஆகும் இப்போது உள்ள பெண்கள் உடல் ஒல்லியாக இருந்தால் தான் அழகு என்று நினைத்து சரியாக சாப்பிடுவதில்லை.

ஆனால் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்த காலை உணவுகளே ஆகும். காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம்.

முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது.

சிலர் காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவர் அது சரியல்ல.

பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் செய்வதற்கு காரணமாகிறது.

உடல் குறைபாடுகள் ஏற்பதுவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைகிறது.

இளநரை.. தலைமுடியின் வளர்ச்சிக்கு



இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன.

உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும்.

வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.

தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும்.

உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும். இந்த எண்ணெய் தலைக்கு நல்லது.

இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

நீங்களும் அழகி தான்!


நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க மாற எளிமையான அட்வைஸ் தருகின்றேன் பாருங்கள்.

ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக வெட்டி அதை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

* பின் சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் முகத்தை கழுவுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் முகத்தை நீங்களே வியந்து விடுவீர்கள்.

* முகத்தை முதலில் பால் வைத்து நன்கு துடைக்கவேண்டும். பிறகு கட்டி தயிரில் உப்பு கலந்து முகத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்தால் முகத்திலும் மூக்குக்கு மேல் இருக்கும் பொடிப்புகள் போகும் இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர பலன் கிடைப்பது உறுதி.

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?




கேள்வி :





என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?





பதில் :



கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம். எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம்.



கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.