என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

மணபெண்ணே இது உங்களுக்கு

1.மணபெண்ணே இது உங்களுக்கு...
''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்பு

இன்றைய சுற்றுப்புற சூழல் அதிக மாசு கலந்ததாக இருக்கிறது. பெண்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக் கப்பட்டு, அழகும் கெடுகிறது. 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும்.

அசைவ உணவுகளின் அள வைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங் களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் ஓரன்ஜ் ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ''இறந்த செல்கள்'' நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ''மில்க் பாத்'' உள்ளது. தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்து ''ஸ்கிரப்'' செய்துவிட்டு, பின்பு ''ஆவி பாத்'' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்க ''மாஸ்க்'' போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

பெண்கள் ''வையின் தெரபி''யும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங் களாகும். இந்த தெரபிக்கான வையின் தனித் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் வையினில் குளிக்கிறார்கள். முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட் களை முதலில் பயன்படுத்த வேண்டும். ''நோர்மல் ஸ்கின்'' கொண்டவர்கள் ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர் கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியி ருக்கும். கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பூ போட்டு கழுவி, கண்டி ஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.


கூந்தல் ''டிரை ஹெயர்'' ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, தலையில் கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 1520 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்போ போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். அழகு நிலையத்தில் இதற்காக ''ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்'' உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.  Aveeno Active Naturals Daily Moisturizing Lotion, 18-Ounce Pump (Pack of 2)

ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற் றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள் வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்.

மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால் கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ்யல், பொடி ட்ரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்ற வைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்த பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலை வது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.

திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும். வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மொடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.

கருத்துகள் இல்லை: