அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி

என்னை பின்பற்றுபவர்கள்

அழகாக இருக்க!- 12 வழிகள்!
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

Wednesday, January 26, 2011

பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும்,
சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு
நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு
ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன்,
ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து
முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம்
பளப்பளப்பாக இருக்கும்.
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து
முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை
நீங்கி பளிச்சிடும்.
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம்
பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்
எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி
முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி,
மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.சிறிதளவு பால்,
ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச்
சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக
வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்
மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு
நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம்
எண்ணை வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள்
கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து
ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை
முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில்
முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில்
மறுபடியும் தடவவும்.நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக
மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி
மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு
வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில்
இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில்
தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு
காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.
ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை
கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம்
அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா
உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை
நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி
செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல
திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள்
இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது
தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல்
கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால்
ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன்
கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்
கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில்
கழுவ முகம்பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு
செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால்,
தேங்காய்எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர
மிருதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின்
மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக்
பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
கழித்து கழுவவேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில்
ஏற்படும் சுருக்கம் மறையும்.
முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன்
மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு
தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம்
மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள்
முகப்பருமறைந்து விடும்.
வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன்
தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான
சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர,
வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ
இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும்
ரோஸ் வாட்டர் கலந்துமுகம் மற்றும் கழுத்தில் தடவி வர
சருமம் பளபளக்கும்.
கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு
தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன்,
எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து
தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால்
வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி
கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும்
சம அளவு கலந்துமுகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால்
முகம் பிரகாசமாக இருக்கும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில்
நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி,
கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர்,
ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை
நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு
எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில்,
அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து
வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி
கருமையாகும், பொடுகு நீங்கும்.
நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக்
காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம்.
வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து
கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில்
சாப்பிட வேண்டும்.
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும்.
மிக மெல்லியபுருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக
அடர்த்தியான புருவம் வைத்துக்கொள்வதும் தற்போது
நாகரிகம் இல்லை.
நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள்
இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள்
ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள
ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர
ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது
டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க் போன்ற
நிறங்களை பயன்படுத்தலாம்.

நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு.
ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது.
பிளவுசும் இறுக்கமாகஇல்லாமல் சிறிது தொள தொளவென அணிய
வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக
உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று
அழுத்தமான வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின்
வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில்
இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ் என பார்த்து
வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண
நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில்,
கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த
வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக்
காட்ட குறுக்குகோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து
அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று
அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்டசேலைகளை
அணிய வேண்டும்.
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி சீவ
வேண்டும்.கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு
அளவுடன் இருப்பதை போல் தோற்றம் கிடைக்கும்.சந்தனம்,
முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு
டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான
சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும்.
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை
மறைந்து மிருதுவாக மாறும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக்
கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில்
தடவி,ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு
நிறமுள்ள புள்ளி மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர
சின்னம்மையால்ஏற்பட்ட வடு மறையும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி
வைக்க கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

No comments:

Beauty Tips புதிய பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற