என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க!

Beauty Tips to Choose the best outfit that suits you - Beauty Care and Tips in Tamil
வெளிநாடுகளில் இருக்கும் பெண்மணிகள் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கிருப்போர் ஒல்லியாக இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி, நன்றாக சரியான ஆடைகளை அணிந்து எந்தக் குறையும் இல்லாமல் "பளிச்"சென்று ஜொலிப்பார்கள். நம்மில் பலர், உடல் எடை கூடியதும் ட்ரெஸ் பண்ணுவதில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதுண்டு. அல்லது தவறான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுவோம். அதே போல எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் மிகவும் ஒல்லியான தோற்றத்தை உடையவர்களும், பல சமயங்களில் தங்களுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தாமல் இருப்பார்கள். இப்போ அதிகப்படியான உடல் எடை உடையவர்கள் மெலிந்த உடலைப் பெற்றவர்களும் எப்படி ட்ரெஸ் செய்யணும், செய்யக்கூடாதுன்னு பார்க்கலாம்....
குண்டான தோற்றம் உடையவர்கள்:
டார்க் கலர் (Black/brown/dark blue) ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார்கள்.
Vertical stripes உள்ள ஆடைகளை அணியவும், பக்கவாட்டத்தில் இருக்கும்படியான Stripes அணிந்தால் குண்டாகத் தெரிவீர்கள்.
பெரிய Checks/கட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கவும்.
காலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரிவீர்கள். wide neck உள்ள ட்ரெஸ்ஷை அணியலாம்.
ஃபுல் ஹேண்ட் டாப்ஸ் - ஃபுல்ஹேண்ட் சுடிதார் வேண்டவே வேண்டாம். ஆஃப் ஹேண்ட்தான் சரி.
"டைட்" ஆன ட்ரெஸ் அணியாதீர்கள். அதுக்காக ரொம்பவும் லூஸ் ஃபிட் சரியல்ல. மீடியம் ஃபிட்தான் பெஸ்ட்.
இப்போ மிகவும் ஒல்லியா இருப்பவர்களுக்கான dressing Do's and Don'ts:
1. Vertical stripes வேண்டாம்.
2. Narrow type Jeans பேண்ட் நன்றாக "சூட்" ஆகும்.
3. Thick materialலில் ட்ரெஸ் வாங்கி போடுங்கள். கொஞ்சம் குண்டா தெரிவீங்க.
4. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவைகளை அணியலாம்.
5. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.

கருத்துகள் இல்லை: